2கே கிட்ஸ் பார்க்க வேண்டிய ரஜினியின் 15 வெற்றி படங்கள்.. தலைவன் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போவீங்க

Actor Rajini Best Movies: மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கோடான கோடி ரசிகரின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து எத்தனையோ நடிகர்கள் வசூல் அளவிலும், ஹிட் படங்களையும் கொடுத்து வந்தாலும் எங்க தலைவருக்கு ஈடாகுமா என்று சொல்வதற்கு ஏற்ப கொடி கட்டி பறந்து வருகிறார்.

அப்படிப்பட்ட இவர் அவ்வளவு ஈஸியா ஒன்னும் இந்த இடத்துக்கு வரவில்லை. 70ல் ஆரம்பித்து இப்பொழுது வரை இவருடைய ஹீரோ என்கிற இமேஜை தக்க வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது, 80 90களில் வெளிவந்த படங்கள் மூலம் தான் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட படங்களை தற்போது உள்ள 2கே கிட்ஸ் பார்த்து ரசிக்க கூடிய படங்கள் ஏகப்பட்டதாக இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம். அந்த வகையில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த புவனா ஒரு கேள்விக்குறி. இந்தப் படம் தான் ரஜினி ஒரு மகா நடிகர், எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு உயிரூட்டி நடிக்க கூடியவர் என்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த படம்.

அடுத்ததாக இளமை ஊஞ்சலாடுகிறது, பைரவி, அபூர்வ ராகங்கள், பில்லா, முத்து, அருணாச்சலம் அண்ணாமலை போன்ற படங்கள் செம ஹிட் ஆகி அதிகமான லாபத்தை கொடுத்த படமாக இடம் பிடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து பாட்ஷா, பில்லா, சந்திரமுகி, தளபதி, கபாலி, தில்லு முல்லு, படையப்பா, மூன்று முகம் போன்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவருடைய கிட் லிஸ்ட் படங்கள் அவ்வளவு அதிகமாக இருக்கிறது.

இந்த படங்களை பார்த்தவர்கள் அனைவரும் ரஜினியின் உண்மையான ரசிகராக அவரை விட்டுக் கொடுக்காத அளவிற்கு இன்னமும் இவருடைய படத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் 2k கிட்ஸ் என்ஜாய் பண்ணும் அளவிற்கு வெளிவந்த படங்களும் ஏராளமானது இருக்கிறது.

அதில் எந்திரன், சிவாஜி, பேட்டை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படமும் இந்த லிஸ்டில் இடம் பிடிக்க போகிறது. வயசானாலும் அழகும், ஸ்டைலும் உன்னை விட்டு போகவில்லை என்ற டயலாக்கு ஏற்ப இன்னமும் இவருடைய நடிப்பை பார்த்தால் மெய்சிலிர்க்கும் வகையில் தான் இருக்கிறது. அதனால் தான் அத்தனை கோடி ரசிகர்களின் மனதிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் சுற்றி வருகிறார்.