சின்னத்திரை ரசிகர்களின் பிடித்தமான ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு முக்கிய பிரபலங்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்திருக்கின்றனர்.
அதிலும் அதிரடி ட்விஸ்ட் ஆக பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் வைல்டு கார்டு போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவரைப் பார்த்த மற்ற ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால் நடிகர் ஆனந்தபாபுவின் மகனான கஜேஷ் சமையல் கலையை படிப்பாக தேர்வு செய்து படித்தவர்.
ஆகையால் நன்கு சமைக்க தெரிந்த இவர், மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக மாறி நிற்கிறார். இவரை தொடர்ந்து பிரபல கலை இயக்குனர் கிரண் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார்.
இவர் முதலில் இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அதன் பிறகு மயக்கம் என்ன, கோ, இரண்டாம் உலகம், நானும் ரவுடி தான், பீஸ்ட் போன்ற ஏராளமான படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
இதைத்தவிர ஒரு சில படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சையுமானவர். இந்த நிலையில் இவர் தன்னுடைய சமையல் திறமையை காண்பிக்க குக் வித் கோமாளியில் களம் இறங்கியுள்ளார்
ஏற்கனவே இதற்கு முந்தைய சீசன்களில் ரித்திகா, முத்துக்குமார் ஆகியோர் வைல்டு கார்ட் போட்டியாளராக வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். அதேபோன்று கஜேஷ் மற்றும் கிரண் இருவரும் தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுக்கப் போகின்றனர். நிகழ்ச்சியும் சூடு பிடிக்க போகிறது.