இந்த வருட தீபாவளிக்கு இப்பவே துண்டை போட்ட 4 படங்கள்.. ரேஸில் தியேட்டர்கள் குறி வைக்கும் சர்தார் 2

2025 தயாராகி வரும் படங்களில் தீபாவளிக்கு எதை வெளியிடுவது என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பலத்த யோசனையில் இறங்கி விட்டார்கள். அப்படி சமீபத்தில் தயாராகி வரும் நாலு படங்கள் இப்பவே துண்டை போட்டு இடத்தை உறுதி செய்துள்ளது.

சர்தார் 2: மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்துக்கு தான் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கார்த்தி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கிய முதல் பாகம் கொடுத்த ஹய்ப்பால் இதற்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது.

பைசன்: துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் போன்றவர்கள் நடிப்பில் இந்த படம் தயாராகி வருகிறது, மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இல்லாத ஜெனரில் கபடி விளையாட்டை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இந்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா 45: ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது சூர்யாவின் 45 வது படம். ரெட்ரோ படம் கொடுத்த தெம்பால் இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் இன்னும் வியாபாரமாக இல்லை. ஆனால் தீபாவளிக்கு உறுதி என்கிறார் ஆர் ஜே பாலாஜி .

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: ஆரம்பத்திலிருந்து இந்த படத்திற்கு பல முட்டுக்கட்டைகள் வந்துள்ளது. லலித் தயாரித்து வந்த இந்த படம் அதன் பின் கை மாறியது, எல்ஐசி என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள் அதற்கும் தடை வந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன, கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.