பான் இந்தியா படங்களால் 3 மாஸ் நடிகர்களை மறந்த தமிழ் சினிமா.. மலையாளிக்கு சூர்யா, சிவா பிடிக்கும் அடம்

பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் மூன்று நான்கு மொழியில் பான் இந்தியா படமாக தான் எடுக்கிறார்கள். அதனால் அங்குள்ள கதாபாத்திரங்கள் நடித்தால் தான் மவுசு எகிரும் என பெரும்பாலும் அந்தந்த மொழிகளுக்கு தகுந்தார் போல் நடிகர்களை தேர்வு செய்கிறார்கள்.

இப்படித்தான் கமலின் தக்லைப் படத்திலும், ரஜினியின் கூலி படத்திலும், தனுஷின் குபேரா படத்திலும் மற்ற மொழி ஆர்ட்டிஸ்டுகள் இடம் பெற்று வந்திருக்கிறார்கள். ஜோஜு ஜார்ஜ், நாகார்ஜுனா, ஜெயராம் போன்ற மற்ற மொழி ஆர்டிஸ்ட்கள் தமிழில் வந்து பெர்பார்ம் செய்கிறார்கள்.

இதனால் இப்பொழுது தமிழ் மொழியில் மாஸ் நடிகர்களாகிய பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் போன்றவர்களுக்கு கௌரவ தோற்றம் மற்றும் அப்பா கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை , இவர்களுக்கு பதிலாக பான் இந்தியா படங்கள் என்பதால் மற்ற மொழி நடிகர்களை தேர்வு செய்கிறார்கள்.

இவர்களது இடத்தை இப்பொழுது தமிழில் மோகன்லால் பிடித்து வருகிறார். இப்படித்தான் சமீபத்தில் தமிழ் மொழியில் அவர் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.ஏற்கனவே அவர் ஜில்லா படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்தார் .

மோகன்லால் தமிழில் கடைசியாக ஜெய்லர் படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சூர்யாவுடன் காப்பான் படத்திலும் நடித்திருந்தார். அடுத்தடுத்து வரவிருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா படங்களில் அவர்களுக்கு தந்தையாகவும் நடிக்க உள்ளார். சுந்தர் சி இவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.