சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய பிரபலங்கள் தங்களது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இயக்குனர்களை தேர்வு செய்கின்றனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தங்களது கேரியரையே க்ளோஸ் செய்த மூன்று இயக்குனர்கள்.
அனுதிப் : ஆங்கராக தனது திரை பயணத்தை தொடங்கி தற்பொழுது டாப் ஹீரோக்களில் ஒருவராக தனது விடாமுயற்சியின் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்ததன் மூலம் சினிமா துறையில் ராசியான நடிகர் என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டான், டாக்டர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதிப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் ரொமான்டிக் கலந்த காமெடி திரைப்படம் ஆகும். ஆனால் சிவகார்த்திகேயன் படம் என்றால் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் ரசிகர்களுக்கு பிரின்ஸ் படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது என்றே சொல்லலாம். இது இவரின் கேரியரிலேயே ஒரு ஆட்டத்தை காண்பித்து விட்டது. அதிலிருந்து தற்பொழுது வரை சிவகார்த்திகேயனால் மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறார்.
வம்சி : சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் தளபதி விஜய். தற்பொழுது இவர் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்துள்ளது. இதுவரை விஜய்யை ஆக்சன் காட்சிகளில் மட்டுமே பார்த்த நிலையில் தற்பொழுது குடும்ப செண்டிமெண்ட் படத்தில் பார்ப்பது ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் வாரிசு துணியுடன் போட்டி போட்ட நிலையில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆரம்பத்திலிருந்து துணிவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களும், வாரிசுக்கு எதிர்மறையான விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதுவே ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை குறைத்ததற்கான காரணமாக அமைந்திருக்கலாம்.
வெங்கி அட்லூரி : தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் தனுஷ் இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இருந்தாலும் சமீப காலமாக கோலிவுட்டில் தெலுங்கு இயக்குனர்கள் இயக்கிய டாப் ஹீரோக்களின் படங்கள் ஆனது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் வாத்தி திரைப்படமும் தோல்வியை தான் சந்திக்கும் என்ற மனநிலை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தெலுங்கு இயக்குனர்கள் இயக்கிய படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
இவ்வாறு இந்த மூன்று இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக ரசிகர்கள் மத்தியில் கெத்தாக இருந்தவர்களின் கேரியரையே குளோஸ் செய்த இயக்குனர்கள் என்று ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டு விட்டனர். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருப்பதால் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் வாத்தி திரைப்படமும் தோல்வியை தான் சந்திக்கும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் தானாகவே வந்து விட்டனர் போல தோன்றுகிறது.