லோகேஷுக்கு வலை விரித்து இருக்கும் 3 ஸ்டார்கள்.. 50 கோடியுடன் காத்திருக்கும் பாலிவுட் நடிகர்

இப்போது லோகேஷின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ஹீரோக்கள் உள்ளனர். ஏனென்றால் அவருடைய படத்தில் நடித்தால் கண்டிப்பாக வேற லெவலில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது தளபதி விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டில் பல ஹீரோக்கள் லோகேஷுக்கு வலை வீசி வருகின்றனர். இதில் குறிப்பாக சல்மான் கான் லோகேஷ் தனது படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம். அதுமட்டுமின்றி அந்த படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்துள்ளார்.

லோகேஷுக்கு இந்த படத்திற்காக 50 கோடி வரை சம்பளம் கொடுப்பதாக கூறியுள்ளாராம். இது ஒரு புறம் இருக்க தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் லோகேஷ் இடம் கதை கேட்டுள்ளார். தன்னுடைய கடைசி படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அதன்படி சூப்பர் ஸ்டாரின் கடைசி படம் லோகேஷின் கைவசம் தான். மேலும் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கம் படத்திற்கு 35 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் தாண்டி மூன்றாவதாக மரண அடி ஹீரோ ஒருவரும் லோகேஷுக்கு வலை வீசி இருக்கிறார்.

அதாவது கே ஜி எஃப் படம் ஹீரோ யாஷ் லோகேஷை ஒரு கதை ரெடி பண்ண சொல்லி உள்ளாராம். ஏற்கனவே கே ஜி எஃப் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள யாஷ் வேற லெவலில் தன்னை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார்.

அதற்கு சரியான இயக்குனர் லோகேஷ் தான் என ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார். மேலும் இதற்கான கதை ரெடியான உடன் யாஷ், லோகேஷ் கூட்டணி அறிவிப்பு வெளியாகும். இப்போதே லியோ, கைதி 2, விக்ரம் 2 படங்கள் உள்ள நிலையில் இன்னும் 5,6 வருடங்களுக்கு லோகேஷுக்கு வரிசை கட்டி படங்கள் நிற்கிறது.