சினிமாவை பொறுத்தவரையில் ஆண்கள் எவ்வளவு வயதானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் சில வருடங்கள் மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடியும். அதன் பிறகு அக்கா, அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் தான் நடிப்பார்கள். அதற்கு விதிவிலக்காக சில நடிகைகள் உள்ளனர். 50 வயதை தாண்டியும் ஹீரோயினாக நடிக்கும் நான்கு நடிகைகளை தற்போது பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய் : உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 48 வயதாகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் 50 வயதை எட்ட உள்ளார். ஆனால் தற்போது வரை ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார். அதிலும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
ஹேமமாலினி : தென்னிந்தியா சினிமாவில் இருந்து பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹேமமாலினி. இவருக்கு தற்போது 73 வயதாகிறது. ஆனால் இப்போதும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஹேமமாலினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஜெயப்பிரதா : 80, 90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜெயப்பிரதாவுக்கு தற்போது 60 வயதை எட்டி உள்ளது. இவர் கமலின் தசாவதாரம் படத்தில் ரஞ்சிதா சிங் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போதும் இவருக்கு பாலிவுட் சினிமாவில் மவுசு அதிகம்.
பூஜா குமார் : மிஸ் இந்தியா யூஎஸ்ஏ என்ற பட்டத்தை நடிகை பூஜா குமார். இவர் ஹாலிவுட் நிறைய படங்கள் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார். பூஜா குமார் தற்போது 45 வயதை எட்டி உள்ளார். இவர் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.