பத்தல பத்தல என கமல் கையில் எடுத்த 4 பிரம்மாண்ட படங்கள்.. தேர்தலுக்கு முன் 1000 கோடிக்கு மேல் பட்ஜெட்

உலகநாயகன் கமலஹாசனுக்கு கடந்தாண்டு 2022 சிறப்பான ஆண்டாகவே அமைந்ததால் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம்  500 கோடி வசூலை வாரி குவித்ததால் பழைய கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு நிறைய படங்களில் நடிக்கவும் தயாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன் அரசியலிலும் தற்போது தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் கமலஹாசன் தேர்தலுக்கு முன் ஒட்டுமொத்தமாக 1000 கோடிக்கு மேல் எடுக்கக்கூடிய 4 பிரமாண்ட படங்களை கையில் வைத்திருக்கிறார். ஆசை யாரை விட்டது, அதுக்கும் மேல அதுக்கும் மேல என்று கமல் இப்பொழுது மேலே மேலே சென்று கொண்டிருக்கிறார்.

தற்போது கமலஹாசன் கையில் வரிசையாக 4 பிரமாண்ட படங்களை வைத்திருக்கிறார். ஏற்கனவே விக்ரம் அதிரிபுதிரி ஹிட், அதற்கும் மேலே இந்தியன் 2 ஹிட்டாகிவிடும், அப்புறம் என்ன மணிரத்னம் படம் இது அதுக்கும் மேலே என்றே சொல்லலாம். இந்நிலையில் ஏற்கனவே கமலும், மணிரத்னமும் இணைந்து 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து சூப்பர்ஹிட் ஆனது. இப்பொழுது அதுக்கும் மேல ராஜமவுலி கூட மணிரத்னம் படம்முடிந்த பின்னர் பண்ண இருக்கிறார்.

மேலும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவின் நடிப்பில் பான் இந்தியா படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில், இப்படம் அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கமலின் நடிப்பில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்த படங்களில் மாபெரும் வெற்றியை கொடுத்து 2023 ஆம் ஆண்டையும் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள உலக நாயகன் கமலஹாசன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமின்றி தேவர் மகன் 2 படத்தில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் ப.ரஞ்சித்தின் படத்திலும், லோகேஷ் கனகராஜின் விக்ரம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க கமல் கமிட்டாகியுள்ளார். இப்படி பத்தல பத்தல என கமல் கையில் நிறைய படங்களை வைத்துக் கொண்டு 1000 கோடிக்கு மேல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெற்றியைக் கொடுக்க வெறிகொண்டு காத்திருக்கிறார்.