Non Flop Movies Directors: சினிமாவை பொறுத்த வரைக்கும் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று. மிகப் பெரிய ஹிட் கொடுத்தவர்கள் அடுத்த படத்திலேயே மண்ணை கவ்வும் அளவிற்கு தோல்வியை கொடுத்ததுண்டு. யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் மிகப் பெரிய ஹீரோக்கள், இயக்குனர்கள் மிகப்பெரிய தோல்வி படத்தை கொடுப்பதுண்டு. ஆனால் இதுவரை இந்த நான்கு இயக்குனர்கள் தோல்வி படம் என்பதே கொடுத்தது கிடையாது.
வெற்றிமாறன்: வெற்றிமாறன் எடுக்கும் படங்கள் எல்லாம் தேசிய விருதுக்கென்று எடுப்பாரா என்று தெரியவில்லை. இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் தேசிய விருதிலிருந்து உலக அரங்கு வரை அங்கீகாரம் பெற்று விடும். சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் இதுவரையிலும் அடுத்தடுத்து ஹிட் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல், தனக்கான சினிமாவை தன்னிறைவாக எடுத்து வருகிறார்.
அட்லி: பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்து, இன்று பாலிவுட் வரை வெற்றியை பார்த்திருப்பவர் தான் அட்லி. இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அடுத்தடுத்து வெற்றியை மட்டுமே பார்த்து வருகிறார். அட்லியின் படம் காப்பி கதை என தமிழ் சினிமா ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும், இன்று வரை அவர் எடுத்த படங்கள் தோல்வி அடைந்தது இல்லை.
லோகேஷ் கனகராஜ்: தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்ற இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவர். வித்தியாசமான கதைக்களம் மூலம் அடுத்தடுத்து இவர் முன்னேறி வருவதோடு, டாப் ஹீரோக்களையும் வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார். இவருக்கும் இதுவரை ஒரு படம் கூட தோல்வி படம் என்று அமைந்தது இல்லை.
ராஜமௌலி: இயக்குனர் ராஜமௌலி தான் முதன் முதலில் தன்னுடைய மொழி ரசிகர்களை மட்டும் நம்பாமல், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் நம்பி பான் இந்தியா மூவியை அதிகமாக களம் இறக்கியவர். அவருடைய நம்பிக்கை மற்றும் கடின உழைப்பிற்கு படங்களின் வெற்றியே சாட்சி. இவருக்கும் இதுவரை ஒரு படம் கூட தோல்வியாக அமைந்ததில்லை.
இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனர்கள் என்ற லிஸ்டில் இந்த நான்கு பேரும் தான் இருக்கிறார்கள். இவர்களின் ஸ்ட்ராட்டஜி நிறைய படங்கள் கொடுப்பது கிடையாது. ஒரு படம் கொடுத்தாலும் அது நின்று பேச வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் வருட கணக்கில் ஒரு படத்திற்காக உழைக்கிறார்கள். உழைப்பின் பலனாக இந்த படங்களும் வெற்றி அடைகின்றன.