Maaveeran Movie: டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ஜொலித்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய அடியாய் பிரின்ஸ் திரைப்படம் அமைந்தது. எனவே அதை ஈடு கட்டுவதற்காகவே மாவீரன் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறார். இன்று ரிலீஸ் ஆன இந்தப் படத்திற்கு திரையரங்கில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இருப்பினும் சிவகார்த்திகேயன் ஒரு பதட்டத்துடன் தான் இருக்கிறார். ஏனென்றால் மாவீரன் படத்திற்கு போட்டியாக இன்றைய தினமே பாபா பிளாக் ஷீப் என்ற படம் வெளியாகி உள்ளது. இதில் அயாஸ், அம்மு அபிராமி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இருப்பினும் இந்த படம் மாவீரனுக்கு போட்டியாக அமையவில்லை. இதற்கு கலவையான விமர்சனம் கிடைப்பதால் இந்த படத்தைப் பற்றி சிவகார்த்திகேயன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இந்த மாதமே மாவீரனுக்கு போட்டியாக 4 படங்கள் ரிலீஸுக்காக வெய்ட்டிங்கில் இருக்கிறது. இதை நினைத்து தான் தற்போது சிவகார்த்திகேயன் பதட்டத்துடன் இருக்கிறார். அதாவது வரும் ஜூலை 21ஆம் தேதி விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த படத்தில் விஜய் ஆண்டனி கொஞ்சம் வித்தியாசமாக டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக ஜூலை 21ம் தேதி அர்ஜுன் தாசின் அநீதி என்ற படமும் வெளியாகிறது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் படுஜோராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதேபோல இந்த மாதத்தின் இறுதியில் அதாவது ஜூலை 28ஆம் தேதி அன்று சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படமும் வெளியாகிறது. அது மட்டுமல்ல அதே ஜூலை 28ஆம் தேதி தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் உருவாகி இருக்கும் எல்ஜிஎம்(LGM) என்ற படமும் ரிலீஸ் ஆகிறது.
இவ்வாறு மாவீரன் படத்திற்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் கொலை, அர்ஜுன் தாஸின் அநீதி, தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்த LGM, சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களும் வெளியாகிறது. ஏற்கனவே பிரின்ஸ் படத்திற்கு வசூலில் படு தோல்வியை சந்தித்த சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை தான் மலைபோல நம்பி இருக்கிறார். ஆனால் இந்த படம் வெளியாகும் போது இவ்வளவு போட்டியா என தற்போது விரக்தி அடைந்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் உதயநிதி தான் என ஒரு பக்கம் அவருக்கு கோபம் வருகிறது.
ஏனென்றால் உதயநிதியின் மாமன்னன் படம் வெளியாகும் என்ற காரணத்தால் தான் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டு இப்போது ஜூலை 14ஆம் தேதிக்கு கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் இந்த படம் இவ்வளவு போட்டிக்கு நடுவில் ரிலீஸ் ஆவதால் வசூலில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என சிவகார்த்திகேயன் பயப்படுகிறார். இருப்பினும் மற்ற படங்களை காட்டிலும் சிவகார்த்திகேயனின் படத்திற்கு தான் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என நம்புகின்றனர்.