இந்த வருட தீபாவளிக்கு பெரிய ஹீரோக்கள் படம் எதுவும் லிஸ்டில் இல்லை. ஆனால் அதற்கு முன்பே கூலி, வார் 2 போன்ற படங்கள் ஆகஸ்ட் மாதமே வெளிவர உள்ளது. இதனால் இந்த வருடம் பெரிய மாஸ் நடிகர் படங்கள் இல்லாமல் தீபாவளி பண்டிகை களை இழந்துள்ளது.
இந்த வருட தீபாவளி ரேசில் நான்கு படங்கள் மோத உள்ளது சிவகார்த்திகேயனின் மதராசி படம் தீபாவளி ரிலீஸ் என்று சொன்னார்கள் ஆனால் இப்பொழுது அதை உறுதி செய்யவில்லை. அதைப்போல் மற்ற மொழிகளிலும் எந்த ஒரு பான் இந்தியா படங்களும் வெளிவரவில்லை. ரேசில் இறங்க காத்திருக்கும் 4 படங்கள்.
சர்தார் 2: முதல் பாகம் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பால் இயக்குனர் P.s மித்ரன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகன், யோகி பாபு போன்றவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இந்த வருட தீவாளி வெளியீடு என அறிவித்துள்ளனர்.
LIK: ஒரு வழியா பல போராட்டத்திற்கு பின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் முடிந்துவிட்டது. பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த படம் வியாபாரமாகாமல் இருந்ததை ஒட்டி ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
டியூட்: மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், மம்தா பஜுலு நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமிழில் நண்பா என்று பெயர் வைத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரத்குமார் நடித்துள்ளார்.இதுவும் தீபாவளிக்கு வரவுள்ளது.
பைசன்: இரண்டு வருடங்களாக துருவ் விக்ரமை தயார் செய்து மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கிறார். இது தூத்துக்குடி பின்புலத்தில் நடைபெறும் கபடி சம்மந்தமான கதைக்களம். நடிகர்கள் லால், பசுபதி, அழகம்பெருமாள், கலையரசன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இதில் நடித்துள்ளது.