2023-இல் ஒரே நாளில் போட்டி போடும் 4 டாப் ஹீரோக்கள்.. மீண்டும் மோத தயாராகும் விஜய், அஜித்

பொதுவாக பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது சாதாரணம் தான். ஒரே நாளில் டாப் நடிகர்களாக இருக்கும் நான்கு நடிகர்களின் படங்களும் வெளியானால் கடுமையான போட்டி நிலவும். அப்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜைக்காக நான்கு ஹீரோக்களின் படங்கள் தயாராகி வருகிறது.

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தில் வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது. மேலும் இந்த படமும் ஆயுத பூஜை ரிலீஸ்க்காக எடுத்து வருகிறார்கள்.

இதே ஆயுத பூஜைக்காக அஜித்தின் ஏகே 62 படமும் தயாராக இருக்கிறதாம். ஏற்கனவே விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு மோதிக்கொண்டது. இதில் துணிவு படம் தான் அதிக வசூல் செய்தது. இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கிறார்.

மேலும் அஜித், விஜய்யின் படங்களுக்கு போட்டியாக மற்ற டாப் இரண்டு நடிகர்களின் படங்களும் வெளியாகிறது. அந்த வகையில் சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியாகும் சூர்யா 42 படமும் ஆயுத பூஜை ரிலீஸ் செய்ய தான் உருவாகிறது. இந்த படம் 3டி அனிமேஷனில் உருவாகி வருகிறது.

அதுமட்டுமின்றி சூர்யா 42 படம் 10 மொழிகளில் எடுக்கப்பட்ட வருகிறதாம். இந்நிலையில் அஜித் விஜய், சூர்யா இவர்களுக்கு போட்டியாக கமலும் ரேசில் இறங்க இருக்கிறார். கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த நிலையில் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் 2 படமும் ஆயுத பூஜை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆகையால் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக பார்க்கப்படும் இவர்களின் படங்கள் மோதிக் கொள்வதால் சரவெடியாய் இருக்கப்படுகிறது.