Nelson-Lokesh: பீஸ்ட் படத்திற்கு பிறகு தன்னை தூற்றியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாய் ஜெயிலர் படத்தின் வெற்றியினை கொண்டாடி வருகின்றார் நெல்சன். இந்நிலையில் இவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த சம்பவத்தால் பெரும் நெருக்கடியில் சிக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தொடர் வெற்றியை கண்டு வரும் லோகேஷ் கனகராஜிற்கு, தற்பொழுது போட்டியாய் களமிறங்கி இருக்கிறார் நெல்சன் என பல பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக பார்க்கப்படுவது தான் ஜெயிலர் படம். பல பிரபலங்களின் துணையோடு ரஜினியின் நடிப்பில் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் பல படங்களின் வசூலை முறியடித்து வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் என தன் அடுத்த கட்ட படங்களில் பிஸியாக இருந்து வரும் இவரை பல நெருக்கடிக்கு ஆளாக்கி வருகிறார் நெல்சன். சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் கண்ட ஜெயிலர் படத்தை லியோ படம் முறியடிக்குமா என்ற கேள்வியும் பல எழ தொடங்கிவிட்டது.
தமிழ் சினிமாவில் 500 கோடி வசூல் கண்ட படங்களை இயக்கிய இயக்குனர்கள் என்று பார்த்தால், ராஜமவுலி (ஆர் ஆர் ஆர் ), ஷங்கர்(எந்திரன்), மணிரத்தினம்(பொன்னியின் செல்வன்), லோகேஷ் கனராஜ்(விக்ரம்) தற்போது இப்பட்டியலில் நெல்சன் இடம் பெற்றுள்ளார்.
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு, ஜெயிலர் படத்தில் இப்படி ஒரு மாற்றமா என்று வாய்ப்பிளக்க செய்து வரும் இவரின் இத்தகைய முயற்சி அடுத்த கட்ட படங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது. அவ்வாறு தான் மேற்கொண்ட லட்சியத்தை முறியடித்து வரும் இவர் ஜெயிலர் படத்தின் பாகம் 2 வை எடுக்கப் போவதாகவும் பேச்சு நிலவுகிறது.
அவ்வாறு பார்க்கையில், இவரின் இத்தகைய வளர்ச்சி லோகேஷ் கனகராஜுக்கு கெடுபிடியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் இடையே பேச்சு எழ தொடங்கிவிட்டது. அதற்கு உதாரணமாகவும் தன் அனைத்து வெற்றி படங்களின் பாகம் 2 வையும் மேற்கொள்ள போவதாகவும் நெல்சன் கூறி வருகிறார்.