ஹீரோவை விட ராஜ்கிரண் பெயர் வாங்கிய 5 படங்கள்.. முத்தையாவாக பந்தாடிய கொம்பன்

ராஜ்கிரண் தனது இளமைக்காலத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஒரு கை பார்த்து உள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஹீரோவையே மிஞ்சும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வாறு ராஜ்கிரணுக்கு பெயர் வாங்கி கொடுத்த 5 படங்களை பார்க்கலாம்.

சண்டக்கோழி : லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி படத்தில் விஷாலின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார். ஊரே வணங்கும் தலைவராக துரை என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

காவலன் : விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் அசினின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்யே போட்டு பந்தாடியிருப்பார். கடைசியில் மகளின் வாழ்க்கைக்காக ஒரு சிறந்த அப்பாவாக முடிவெடுத்து இருப்பார். இந்தப் படத்திலும் ராஜ்கிரண் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கொம்பன் : லட்சுமி மேனனின் தந்தையாகவும், கார்த்தியின் மாமாவாகவும் ராஜ்கிரண் இந்த படத்தில் நடித்திருந்தார். மகளுக்காக எதையும் செய்யும் அப்பாவாக முத்தையா என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார் ராஜ்கிரண். இவருடைய காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் வரச் செய்யும் அளவிற்கு உணர்ச்சிகரமாக இருந்தது.

வேங்கை : தனுஷின் தந்தையாக வேங்கை படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வீரபாண்டி என்ற முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருப்பார். தனுஷை விட வேங்கை படத்தில் ராஜ்கிரணுக்கு தான் அதிக ஸ்கோர் கிடைத்தது.

மஞ்சப்பை : ராகவன் இயக்கத்தில் விமல், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மஞ்சப்பை. இந்தப் படத்தில் தாத்தா வெங்கடச்சாமி என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். ஒரு கிராமத்தில் வளர்ந்த வெளந்தியான குணம் உடையவர் பட்டினத்திற்கு வந்ததால் அவருடன் இருப்போர் என்னென்ன பாடுபடுவார் என்பதை வேடிக்கையாக சொன்ன படம் மஞ்சப்பை.