சென்சார் போர்டை முகம் சுளிக்க வைத்து “A” சான்றிதழ் வாங்கிய 5 படங்கள்.. முதல் இடத்தை பிடித்த கமல்

தென்னிந்திய திரைப்படங்களில் காமெடி,காதல், ஆக்ஷன், என பல தரப்பட்ட திரைப்படங்கள் சென்சாருக்கு சென்று யு, யு /ஏ , ஏ என்ற தரவரிசையில் பிரித்து அவைகளை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்கப்படும். இப்படி பல படங்கள் இருந்தாலும் அடல்ட் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஏ சான்றிதழ் தான் வழங்கப்படும். அப்படி பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைத்துள்ள 5 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில், சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருப்பர். கமலஹாசன் இப்படத்தில் ஆன்டி ஹீரோ கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இருந்தாலும் இப்படத்தில் கமல் ஸ்ரீதேவியின் முத்தக் காட்சிகள், காதல் காட்சிகளை பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.

உயிர்: 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்திருப்பார். யு/ஏ சான்றிதழ் இப்படத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் படத்தின் ஒவ்வொரு பாடல் காட்சிகளும் பார்ப்பதற்கும்,கேட்பதற்கும் கொஞ்சம் கூட ரசிக்கும்படி இருக்காது. மேலும் ஸ்ரீகாந்தின் கேரியரை மூழ்கடித்த திரைப்படமாகவும் இப்படம் அமைந்தது.

சிந்து சமவெளி: இயக்குநர் சாமி இயக்கத்தில் மலையாள படமாக இப்படம் வெளியான நிலையில், பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அமலாபாலுக்கு முதல் படமாக அமைந்த நிலையில் இப்படத்தின் கதையை கேட்பதற்கே சகிக்காது. அப்போது படத்தில் வரும் காட்சிகளை சொல்லவா வேண்டும். இன்று வரை அமலாபால் எவ்வளவோ படங்கள் நடித்திருந்தாலும் இப்படத்தின் தாக்கத்தால் அவர் அடல்ட் நடிகையாகவே வலம் வருகிறார்.

மிருகம்: இயக்குனர் சாமி இயக்கிய இப்படத்தில் நடிகர் ஆதி, பத்மப்ரியா உள்ளிட்டோர் நடித்திருப்பர். நடிகர் ஆதியின் முதல் படமாக அமைந்த நிலையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்க்கவே சகிக்காது. இப்படத்தில் நடித்த நடிகை பத்மப்ரியா இப்படத்தில் நடிக்க பிடிக்காமல் விலக நினைத்த நிலையில், இயக்குனர் அடித்து, மிரட்டி இப்படத்தில் நடிக்க வைத்ததாக புகாரும் தெரிவித்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து: இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் யாஷிகா, கவுதம் கார்த்திக், வைபவி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.படத்திற்கு கதை ஒன்று வேண்டும் என்ற பெயரில் பேய் படமாக உருவாக்கினார் இயக்குனர். ஆனால் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் திரையரங்குகளில் வசூல் வேட்டை அடைந்தது. இப்படம் கவுதம் கார்த்திக்கின் கேரியரை காலி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.