இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்ட 5 படங்கள்.. பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்

புத்தாண்டு துவங்கப்பட்டு இரண்டே மாதங்கள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் அதிக கலெக்சனை அள்ளிய 5 படங்களை பற்றி பார்ப்போம். அதிலும் சில வருடங்களாகவே ஹிந்தி படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் இருந்த நிலையில், ஷாருக்கானின் பதான் படம் பாலிவுட்டை தூக்கி நிறுத்தியது என்றே சொல்லலாம்.

பதான்: கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து, கடந்த 2 வருடங்களாக பாலிவுட்டில் பாய் காட் பிரச்சனை தலை தூக்கிய நிலையில், தொடர்ந்து ரிலீசாகும் ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது.

இதனால் ஷாருக்கான் 5 வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக என்ட்ரி கொடுத்த பதான் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பாலிவுட் திரையுலகினர் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவுக்கு உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் பதான் படம் வசூலை வாரிக் குவித்தது. அதிலும் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் 10 கோடிக்கு மேல் கலெக்சன் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

டாடா: வளரும் இளம் நடிகரான கவின் கதாநாயகனாக நடித்த டாடா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மிகக் குறைந்த பட்சத்தில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 கோடி வரை வசூலை வாரிக் குவித்திருக்கிறது

வாத்தி: தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படத்தில் தனுஷ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி பிறமொழி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறார். உலக அளவில் தற்போது வரை 100 கோடி வசூலை தாண்டி இருக்கும் வாத்தி, தமிழகத்தில் 31 கோடியை வசூல் செய்திருக்கிறது.

துணிவு: இந்த வருட பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியானது தான் துணிவு. பக்கா ஆக்சன் படமாக வெளியான இந்தப் படம் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இதனால் தமிழகத்தில் மட்டும் அஜித்தின் துணிவு 118 கோடியை வசூல் செய்தது.

வாரிசு: இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ரிலீசான விஜய்யின் வாரிசு திரைப்படம் பக்கா பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக இருந்தது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 146 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் தான் 2023 ஆம் ஆண்டில் வெளியாகி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்யப்பட்ட டாப் 5 படங்கள் ஆகும். அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிந்தி படமான பதான் வெற்றி பெற்றிருப்பதால், பாலிவுட் பிரபலங்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.