போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகிய ஹிட்டான 5 படங்கள்.. சிம்பு, தனுஷ் யுத்தத்திற்கு நடுவே வந்த வாரணம் ஆயிரம்

5 Movies Re-released: சினிமா தோன்றிய காலத்தில் இருந்து காலங்காலமாக இரு ஹீரோகளுக்கு இடையே போட்டி நிலவிக் கொண்டு நீயா நானா என்ற மோதல் நிலவி வருகிறது. அந்த வகையில் இரு ஹீரோக்களுமே ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்ல என்பதற்கு ஏற்ப ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்து விடுகிறார்கள்.

இதில் சிம்பு மற்றும் தனுஷும் ஆரம்பத்தில் மோதிக்கொண்ட நிலையில் சிம்புவை விட ஒரு படி மேலே நான் தான் என்று நிரூபித்துக் காட்டி விட்டார் தனுஷ். ஆனாலும் சிம்பு நடித்த ஒரு சில படங்கள் மக்களின் பேவரைட் படமாக இருக்கிறது. இதனால் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஹிட் படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் இவருடைய கேரியரிலே மைல்கல்லாக அமைந்த படம் என்றே சொல்லலாம். அதனால் இப்படத்தை இப்பொழுது வரை PVR-ல் கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு மேலாக தினமும் ஒரு ஷோ போட்டுக்கிட்டு வருகிறார்கள்.

Also read: ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்

சிம்புவுக்கு போட்டியாக தனுஷும் அவர் நடித்த 3 படத்தை கமலா தியேட்டரில் ரீ- ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதுவரை 70,000 டிக்கெட் விற்பனை பண்ணி இருக்கிறார்கள். அதுவும் டிக்கட் ரேட் 50 ரூபாய் என்பதால் தமிழ்நாடு ஃபுல்லா ரிலீஸ் செய்து செம கலெக்சன் ஆயிருக்கிறது.

இதனால் மறுபடியும் தனுஷ் அவர் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ன படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார். இதை பார்த்த சிம்புவும் பொறாமையில் அவர் நடித்த வெற்றி படமான வல்லவன் படத்தை ரீ- ரிலீஸ் செய்திருக்கிறார். இப்படி இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு யுத்தம் பண்ணிக் கொண்டிருக்கையில் இவர்களுக்கு நடுவே சூர்யாவும் அவருடைய வாரணம் ஆயிரம் படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஹிட் படங்களை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து அதன் மூலமும் கல்லாகட்ட ஆரம்பித்து விட்டார்கள். தற்போது இது எல்லா பக்கமும் ட்ரெண்டிங் ஆகவும் மாறிக்கொண்டே வருகிறது.

Also read:  தலைவர் பிறந்தநாளில் தனுஷ் போட்ட ட்வீட்.. மாமனாரை விடாமல் தாஜா பண்ணும் மருமகன்