தெலுங்கில் 30 கோடி வசூல் சாதனை பார்த்த 5 தமிழ் ஹீரோக்கள்.. அக்கட தேசத்தில் கலக்கிவரும் தனுஷின் வாத்தி

பொதுவாக தமிழ் ஹீரோக்களுக்கு இங்கு வரவேற்பு கிடைப்பது சர்வ சாதாரணம் தான். ஆனால் அக்கடதேசத்திலும் ரசிகர்களை கவர வேண்டும் என்றால் அதில் சில விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அப்படி தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து அங்கு 30 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களை இப்போது பார்க்கலாம்.

ரஜினி : சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ் சினிமாவில் எப்படி மாஸ் ரசிகர்கள் உள்ளனரோ அதேபோல் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 30 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விக்ரம் : நடிகர் விக்ரமின் பல படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் 2019-ல் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படம் தெலுங்கிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் அங்கும் வசூலில் பட்டையை கிளப்பியதாம்.

கமல் : உலக நாயகன் கமலஹாசன் தற்போது சினிமாவில் படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் கமலின் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த விக்ரம் படம் தெலுங்கு சினிமாவிலும் 30 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு அதிகம் தெலுங்கு ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

லாரன்ஸ் : ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. இதில் வெளியான மூன்று பாகங்களுமே அங்கு நல்ல வசூலை ஈட்டியது. அந்த வகையில் காஞ்சனா 3 படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.

தனுஷ் : தமிழ் சினிமாவை தாண்டி எல்லா மொழி படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் தனுஷின் வாத்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்போதும் வெற்றிகரமாக ஓடி வரும் வாத்தி படம் தெலுங்கில் 30 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.