90களில் முதல் படத்திலேயே ஜொள்ளு விட வைத்த 5 ஹீரோயின்ஸ்.. அடம்பிடித்து மல்லு கட்டிய ராம்கி

5 unforgettable actress of 90’s Tamil cinema: இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய் வருகின்றனர். ஆனால் 90 காலகட்டத்தில் அறிமுகமான நடிகைகளோ இன்று வரை  ரசிகர்களின் மனதில் ஆட்சி செய்து வருகின்றனர்.  அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை சாய்த்து வெற்றிக்கொடி நாட்டிய ஐந்து நடிகைகளை பற்றி காணலாம்,

தபு: காதலுக்கும் நட்புக்கும் ஆன வித்யாசத்தை மெல்லிய உணர்வுடன் அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம் காதல் தேசம். ஆறடி உயரம், அழகிய உருவம், ஆப்பிள் போலே இருக்கும் இந்த கனவுக்கன்னி தபு. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல், நடிக்கும் அத்தனை படத்திலும் கண்களாலேயே ரசிகர்களை கைது செய்து விடுவார். இன்று வரை இளமை மாறாது இந்திய சினிமாவின்  தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் தபு.

மும்தாஜ்: கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் மும்தாஜ். டி ராஜேந்திரரின்  மோனிஷா என் மோனலிசா படத்தின் அறிமுக நடிகையான மும்தாஜ் 90’s கிட்ஸ் களின் கனவு கன்னியாவார். ரசிகர்கள், “நான் மும்தாஜின் ஃபேன்” என்று சொல்வதையே பெருமையாக எண்ணிக்கொண்டிருந்த காலம் அது. ரசிகர்களின் கனவை கலைக்காத இந்த கனவுக்கன்னி இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

சிம்ரன்: 90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகை மற்றும் இயக்குனர்களின் முதல் தேர்வாக இருந்தது சிம்ரன் மட்டுமே ஆவார். விஐபி படத்தில் அறிமுகமான சிம்ரன், சூறாவளியாக வந்து தமிழ் ரசிகர்களை அதிகமாக  ஜொள்ளு விட வைத்தார். மாயாவி படத்தில் கூறுவது போல் சிம்ரனின் ரசிகர்கள் அவரின் போஸ்டரையே அரை மணி நேரத்திற்கு மேலாக பார்க்கும் அளவுக்கு ஏங்க வைத்தவர் சிம்ரன்.

மோகினி:  நீல விழிகளுடன் இவர் கொண்ட பார்வையில் தமிழ் ரசிகர்கள் கிரங்கடித்துப் போனார்கள். ஈரமான ரோஜாவே படத்தில் அறிமுகமான இந்த கல்லூரி தென்றல் பாரம்பரிய தமிழ் பெண்ணாக இருந்தாலும் மற்ற மொழி படங்களில் அதிகமாக கோலோச்சி இருந்தார். வனஜா கிரிஜா,புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற சில படங்களை நடித்திருந்தாலும் 90’s கிட்ஸ் களின் மறக்க முடியாத நடிகை ஆவார்.

நிரோஷா:  எம் ஆர் ராதாவின் மகள் ராதிகாவின் தங்கை என்ற அடையாளத்துடன் தமிழ் துறையில் திரையுலகில் அறிமுகமான நடிகை நிரோஷா முதல் படமான அக்னி நட்சத்திரத்திலேயே கவர்ச்சியுடன் மாடர்ன் கேர்ள் ஆக வலம் வந்து தமிழ் ரசிகர்களை வாய் அடைக்க வைத்திருந்தார். செந்தூரப்பூவே படத்தில் நடித்திருந்த நிரோஷா மற்றும் ராம்கி இருவரும் நிஜ வாழ்விலும் காதல் வயப்பட, தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவு பல்வேறு எதிர்ப்புகளை மீறி நீண்ட பஞ்சாயத்துக்களை கடந்து கரம் பிடித்து வெற்றிகரமான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.