எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

Actor Kamal: களத்தூர் கண்ணம்மா படத்தில் நான்கே வயதில் தெளிவான உச்சரிப்பில், சிறுவனாக படம் முழுக்க பயணித்த குழந்தை நட்சத்திரமான கமல் பார்த்த பலரையும் வாயடைக்க வைத்தார். நிஜமாகவே இந்த குழந்தை அதிசய குழந்தை தான் என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நடித்து அசத்தியவர்.

இவரை சிறுவயதிலிருந்தே பல முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தெய்வக் குழந்தையாகவே பார்த்திருக்கின்றனர். எந்த நடிகருக்கும் இல்லாத கமலஹாசனுக்கு உள்ள சிறந்த 6 குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

கமலஹாசனுக்கு இருக்கும் துணிச்சல் மற்றும் தைரியம் எந்த அளவிற்கு என்றால், 5 வயதில் நடித்ததற்கு பிளைமவுத் காரை சம்பளமாக கேட்டிருக்கிறார். குழந்தையாக இருந்து வளர்ந்த கமல் தன்னுடைய 25-வது வயதில் தான் கதாநாயகனாக அபூர்வராகங்கள் படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக இருந்த கமலஹாசன் பல படங்களில் கிட்டாரை கையில் வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் ஹீரோயின்களுடன் ரொமான்டிக் பாடல்களில் ஆடிக்கொண்டிருக்கும் போது, முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் எவ்வித தயக்கமும் இன்றி கோமணத்தை கட்டி தன்னை அசிங்கமாக காட்டிக் கொண்டவர்.

அது மட்டுமல்ல அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கும் போது வெளிநாட்டில் உள்ள யுக்திகளை அதிக அளவு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதற்காக அவர் நான்கு வயதிலிருந்து சம்பாதித்த மொத்தத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்த ஒரே நடிகரும் கமலஹாசன் தான்.

அது மட்டுமல்ல இவர் இதுவரை நடித்த எந்த படத்திலும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என பஞ்ச் டயலாக் பேசாதவர். அத்துடன் சமுதாயத்தின் நிறை குறைகளை முன்கூட்டியே தைரியமாக திரையில் கூறுபவர். இவர் இதுவரை சினிமாவில் வந்த எல்லா நடிகர்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமானவராகவே இருக்கிறார்.