கோலிவுட்டை தற்பொழுது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரது கை வசத்தில் வரிசை கட்டி நிற்கும் டாப் ஹீரோக்களின் 6 படங்கள், அதிலும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் உலகநாயகனின் படம். யாரும் எதிர்பாராத பாலிவுட் மிரட்டல் கூட்டணி ஆக அமைய உள்ளது.
சினிமா துறையில் இளம் இயக்குனர்களில் ஒருவராக உள்ள லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களான கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இவர் இயக்கத்தில் வெளியான கைதி படம் தான் இவரின் கேரியருக்கே பக்க பலமாக அமைந்த படம் ஆகும். இதன் தொடர்ச்சியாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி 500 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது. அதிலும் படத்தில் கடைசியாக வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு அடிக்கல் ஆகவே அமைந்தது என்றே சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாப் ஹீரோக்களுடைய படங்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்கச்சக்கமாக லயன் அப்பில் வரிசை கட்டி வெளியாக உள்ளது. இவ்வாறு டாப் ஹீரோக்கள் இளம் இயக்குனர் படத்தில் நடிப்பதற்கு வரிசை கட்டி கியூவில் நின்று வருகிறார்களாம்.
அந்த வரிசையில் தற்பொழுது தளபதி 67, கைதி 2, அல்லு அர்ஜுன், விக்ரம் 2, ரோலக்ஸ் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. அதிலும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தினை முழு நீள படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதில் விஜயின் தளபதி 67 படத்தில் உலகில் மிகச்சிறந்த உபகரணங்களைக் கொண்டு லோகேஷ் பயன்படுத்தி உள்ளார்.
அதிலும் முந்தைய படங்களை ஒப்பிடும் பொழுது தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு அம்சங்களைக் கொண்டு வெளியாக உள்ளது. அதிலும் இவர் இயக்கும் அல்லு அர்ஜுன் ஒரு பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. கோலிவுட்டையும் தாண்டி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பாலிவுட் நடிகர் சல்மான்கான் படத்தினையும் இயக்குகிறார். இது பாலிவுட்டில் மிரட்டல் கூட்டணியாக அமைய உள்ளது.