அக்கா தங்கை இணைந்து வெற்றி கண்ட 6 படங்கள்.. அம்பிகா ஸ்கோர் செய்தும் தட்டி தூக்கிய ராதா

Actress Ambika-Radha: படத்தில் அக்கா தங்கை கதாபாத்திரம் ஏற்று நடிப்பதை காட்டிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இணைந்து, தான் ஏற்ற கதாபாத்திரமாகவே மாறி அசத்திய அம்பிகா ராதாவின் 6 படங்களை பற்றி இத்தொகுப்பு காணலாம்.

80காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாய் வலம் வந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாய் எண்ணற்ற படங்களில் நடித்து வெற்றி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடித்த கதாபாத்திரம் குறித்த தகவலை தொடர்வோம்.

தன் அக்கா அம்பிகாவின் நடிப்பை கண்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தினை பெற்றவர் ராதா என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த இவர்கள் எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாய் அம்பிகா நடித்திருப்பார். அதன்பின் அவரை விட்டு அம்பிகா பிரிந்து விடுவார் அந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாய் ராதா இடம் பெற்றிருப்பார்.

மேலும் அம்பிகா ரஜினியை ஏற்றுக் கொள்கிறாரா என்பதை கதையாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். இதை அடுத்து சிவாஜி கணேசன், பிரபுவுடன் இணைந்து நடித்த படம் தான் வெள்ளை ரோஜா. இப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அம்பிகாவும், சுரேஷுக்கு ஜோடியாக ராதாவும் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படம் இவர்கள் இருவரின் நடிப்பில் சூப்பர் ஹிட் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் அம்பிகை நேரில் வந்தால் என்னும் படத்தில் மோகனுக்கு ஜோடியாய் ராதா நடித்திருப்பார், பின் அம்பிகா சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றிருப்பார். 1985ல் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இதய கோவில் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் பெற்றாலும் சுமாரான விமர்சனங்களே பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து 1986ல் மனக்கணக்கு என்னும் படத்தில் விஜயகாந்த், ராதா, அம்பிகா, கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

1987ல் வெளிவந்த காதல் பரிசு என்னும் படத்தில் கமலுக்கு ஜோடியாக இருவரும் நடித்திருப்பார்கள். கமலுக்கு காதலியாய் நடித்து ஸ்கோர் செய்த அம்பிகாவை, தட்டி தூக்கும் விதமாய் ராதாவின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் தாம்பத்தியம் என்னும் படத்தில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த இவர்கள் இப்படத்தில் ஓரளவு விமர்சனங்களை பெற்றார்கள். அதை தொடர்ந்து 1988ல் வெளிவந்த அண்ணா நகர் முதல் தெரு படத்தில் சத்யராஜிற்கு ஜோடியாய் ராதாவும் மற்றும் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.