த்ரில்லர் மூவி பிரியர்களே, இந்த 6 படத்தை மிஸ் பண்ணாம பார்த்துடுங்க!. IMDB ரேட்டிங்கில் மிரட்டிய அஞ்சாம் பத்திரா

Thriller Movies: திரில்லர் மூவி படங்களை பார்த்தால் நேரம் போவதே தெரியாது. ஒரு கொலை அல்லது குற்றவாளியை கண்டுபிடிப்பது. அதைத் தொடர்ந்து வரும் ட்விஸ்டுகள் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்து விடும்.

ட்ரில்லர் மூவி பார்ப்பதை அதிகமாக விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு மலையாள படத்தை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

ஹெவன்: கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ஹெவன். மாணவர்கள் சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் ஒரு பிணம் கிடைக்கிறது. அதில் குற்றவாளியாக ஹீரோ கைதாகிறார்.

இதன் பின்னணி தான் படத்தின் கதை. IMDB ரேட்டிங்கில் 6.5 மதிப்பு பெற்றிருக்கிறது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.

தி கிரேட் பாதர்: மம்முட்டி, சினேகா மற்றும் ஆர்யா நடிப்பில் உருவான படம் தி கிரேட் பாதர். தன் மகளை பாலியல் ரீதியாக கொடுமை செய்த சீரியல் கில்லரை ஹீரோ பழி வாங்கும் கதை.

ஜீ 5 இல் இருக்கும் இந்த படம் ஐ எம் டி பி ரேட்டிங்கில் 6.8 மதிப்பெண்களை பெற்றிருக்கிறது.

IMDB ரேட்டிங்கில் மிரட்டிய அஞ்சாம் பத்திரா

அஞ்சாம் பத்திரா: IMDB ரேட்டிங்கில் 7.9 மதிப்பெண்களை பெற்ற அஞ்சாம் பத்திர படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா வலைதளத்தில் இருக்கிறது.

கொலை வழக்கு ஒன்றில் போலீசுக்கு உதவும் ஹீரோவுக்கு தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.

கண்ணூர் ஸ்குவாட்: மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் படம் கிட்டதட்ட கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று கதையை கொண்டதுதான்.

ஐஎம்டிபி ரேட்டிங்கில் 7.6 மதிப்பெண்கள் பெற்ற இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.

பாரன்சிக்: தொடர்ந்து நடக்கும் கொலைகளை தடவியல் நிபுணராக இருக்கும் ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் ஐ எம் டி பி ரேட்டிங்கில் 6.3 மதிப்பெண்களை பெற்றிருக்கிறது. இந்த படத்தை Netflix தளத்தில் பார்க்கலாம்.

இரட்டா: காவல் நிலையத்தில் வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போலீஸ் இறந்து விடுகிறார். இது கொலையா, கொலை செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்திற்கு 7.7 மதிப்பெண்களை ஐஎம்டிபி ரேட்டிங் கொடுத்திருக்கிறது. இந்த படத்தை Netflix தளத்தில் பார்க்கலாம்.

Leave a Comment