சிவாஜி, கமல் போன்ற நடிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளனர். ஆனால் டாப் 6 ஹீரோக்கள் முதலில் நடித்த இரட்டை வேடப் படங்கள் எது என்பதை இப்போது பார்க்கலாம். 5 ஹீரோக்களுக்கு ஹிட் கொடுத்த இரட்டை விட படங்கள் விஜய்க்கு மட்டும் தோல்வியை தந்துள்ளது.
சிவாஜி கணேசன் : நடிகர் திலகம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இவர் முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடித்த படம் உத்தம புத்திரன். இந்த படத்தில் சிவாஜி பார்த்திபன் மற்றும் விக்ரமன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எம்ஜிஆர் : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்கள் விரும்பும் படியாக எண்ணற்ற படங்களை கொடுத்துள்ளார். எம்ஜிஆர் தான் இயக்கிய முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் மன்னன் மார்த்தாண்டன் மற்றும் வீரங்கன் என்ற கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார்.
கமல்ஹாசன் : உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஏராளமான இரட்டை வேட படங்கள் வெளியாகி உள்ளது. இதில் கமல் முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடித்த படம் என்றால் அது சட்டம் என் கையில். இந்தப் படத்தில் கமல் பாபு மற்றும் ரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரஜினி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில படங்களில் தான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ரஜினி முதல் முதலாக டபுள் ரோலில் நடித்த படம் பில்லா. இந்தப் படத்தில் ரஜினி பில்லா மற்றும் ராஜப்பா என்ற இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
அஜித் : அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அவரது முதல் இரட்டை வேட படம் தான். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் தேவா மற்றும் சிவா என நேர் மற்றும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
விஜய் : தளபதி விஜய் முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடித்த படம் அழகிய தமிழ்மகன். இந்த படத்தில் பிரஷாந்த் மற்றும் குரு என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் விஜய்க்கு படுமோசமான தோல்வியை கொடுத்தது.