66 வயதிலும் ஹரா படப்பிடிப்பில் வித்தை காட்டிய மைக் மோகன்.. மூக்கில் விரலை வைத்த படக்குழு

80-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுட்டப்பழம் படத்தில் நடித்த பிறகு, சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக விஜய் ஸ்ரீ  இயக்கியுள்ள ஹரா படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

மோகனுக்கு ஜோடியாக குஷ்பு ஜோடி சேர்ந்துள்ளார். இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கும் என்று, சமீபத்தில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியான இந்தப்படத்தின் டீசரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்திற்கு மோகன் நிறைய உழைத்திருக்கிறார்.

திரிசூலத்துடன் சண்டைக் காட்சிக்கு தயாரான மோகன்

mohan-1-cinemapettai.jpg
mohan-1-cinemapettai.jpg

இந்த படத்திற்காக மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் மைக் மோகன் ரவுடிகளுடன் மோதும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்துகிறாராம். இந்தக் காட்சிகளில் மைக் மோகன் திரிசூலத்துடன் கொடூரமாக ரவுடிகளுடன் சண்டை போடுகிறார்.

மேலும் மோகன் தன்னுடைய 66 வயதில் ஹரா படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பின் போது ஆக்சன் காட்சியில் காட்டிய வித்தைகளை பார்த்த படக்குழுவினர் மூக்கின் மேல் விரல் வைத்து விட்டனராம்.

ஹரா படத்திற்காக மிகப் பிரம்மாண்டமான அமைக்கப்பட்ட செட்

mohan-2-cinemapettai
mohan-2-cinemapettai

அப்பவே ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த மோகன் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து விலகியிருந்தார். அவர் ஒரு சில படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் பெயர் பெறவில்லை. இதனால் அவரே படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். இதனால் அவருடைய ரசிகர்கள் மோகனின் ரீ என்ட்ரிகாகவே காத்திருந்தனர்.

அதற்கேற்றாற்போல் இப்பொழுது இந்தப் ஹரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹரா படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட் மற்றும் அதில் மைக் மோகன் ரவுடிகளுடன் சண்டை போடும் காட்சிகள் அமைந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

பிரம்மாண்ட செட்டில் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய மைக் மோகன்

mohan-3-cinemapettai.jpg
mohan-3-cinemapettai.jpg