75 கோடி சம்பளமா.? சிவகார்த்திகேயன் கூறிய பதில்!

சின்னத்திரையில் காலக்கப்போவது மூலம் அறிமுகமாகி கண்டஸ்டன்டில் இருந்து தொகுப்பாளராகி பெரிய திரைக்கு வந்து சேர்ந்து இப்போது அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

எஸ்.கே என்றழைப்பதை பெரிதும் விரும்பும் வகையில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் சிவா. தற்போது “டாக்டர்”, “அயலான்”, “டான்” என பிசியாக நடித்து வரும் எஸ்.கே வுக்கு டான் மட்டுமே முடிவடையாமல் தொடர் வேலைகளில் உள்ளது.

அடுத்ததாக எஸ்.கே விடம் நேரடியாக களத்திற்கு வந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருளாதார படங்களையும் எளிதில் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஒரு டீல் பேசி வருகிறது.

ஐந்து படங்கள் ஒரே நிறுவனம் 75 கோடி சம்பளம் என்றும் அதற்காக 15 கோடி அட்வான்ஸ் தருவதற்கும் தயாராக உள்ளது. இவ்விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே எஸ்கே பச்சைக்கொடி காட்ட மறுக்கிறார்.

இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று சிவகார்த்திகேயன் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அதுமட்டுமில்லாமல் தனக்கு கடன் இருப்பதாகவும் அதைக் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் படங்களின் மூலம் அடைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது அயலான் படத்தை வெளியிட உள்ளது. இதனால் சன் பிக்சர்ஸ் உடன் 5 படங்கள் என்பது சாத்தியமில்லை தற்போது என்பதை உறுதி செய்து விட்டாராம் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai