கார்த்தியின் அதிர்ஷ்டத்தால் ஹிட் கொடுத்த 8 இயக்குனர்கள்.. அடையாளமாக மாறிய சிறுத்தை சிவா

Karthi : கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல இயக்குனர்களுக்கு சிறந்த படத்தை கார்த்தி கொடுத்திருக்கிறார்.

லோகேஷுக்கு விக்ரம் படம் அடையாளமாக இருந்தாலும் கார்த்தியின் கைதி படம் அவருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது. அடுத்ததாக ரஞ்சித்துக்கு அடையாளம் கொடுத்தது மெட்ராஸ் படம் தான். இது கார்த்திக்கும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனரான வினோத் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் அஜித்தின் பட வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது.

கார்த்திக்கு பெரிய ஹிட் கொடுத்த 8 இயக்குனர்கள்

அடுத்ததாக கார்த்தி இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த படம் தான் சிறுத்தை. இந்த படத்தின் வெற்றியால் சிறுத்தை சிவா என்று இயக்குனர் அழைக்கப்பட்டு வருகிறார். அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி தோழா படத்தை இயக்கியிருந்தார்.

நாகர்ஜுனா மற்றும் கார்த்தி இருவரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து லிங்கசாமிக்கு அடையாளம் கொடுத்த படம் விஷாலின் சண்டக்கோழி. அதன் பிறகு பெரிதும் பேசப்பட்ட படம் என்றால் கார்த்தியின் பையா தான்.

அதேபோல் இயக்குனர் செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்தியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. மேலும் பிரேம் விஜய் சேதுபதியின் 96 படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதேபோல் மெய்யழகன் படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இப்போது கார்த்தி வா வாத்தியார் மற்றும் சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் கார்த்தியின் ஆண்டாக தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த படங்கள் வெற்றி வாகை சூடுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.