Good Bad Ugly: நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு என்று சொல்வார்கள். அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தை பார்த்தபோது தோன்றி இருக்கும்.
இந்த படத்தில் சிம்ரன் இணைந்தது ரசிகர்களுக்கு பெரிய அளவில் சந்தோஷத்தை கொடுத்தது. அதற்கு காரணம் இந்த ஜோடி வெள்ளி திரையில் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய ஜோடி.
சிம்ரனை வச்சுட்டு இதெல்லாம் பண்ணியிருக்க கூடாது
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இணைவது தான் இந்த படத்தின் ஒரு பாசிட்டிவ் கூட. தீனா படத்தில் தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்ற ஒரு வசனம் வரும்.
அப்படித்தான் ஒரு சம்பவம் இந்த படத்தில் ஒரு காட்சியில் வந்திருக்கிறது. சிம்ரனுக்கு 2,3 காட்சி தான் இந்த படத்தில். அதிலும் ஏப்ரல் மாதத்தில் பாடலின் பிஜிஎம் உடன் வரும்.
மேலும் சிம்ரன் நடித்து இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலும் இந்த படத்தில் இருக்கிறது.
90களின் காலகட்டத்தில் இந்தப் பாடலை பார்த்தவர்களுக்குத்தான் இந்தப் பாட்டின் வரலாறு தெரியும். அப்படிப்பட்ட பாட்டுக்கு பிரியா வாரியரை ஆட வைத்தது தான் ரசிகர்களுக்கு வருத்தம்.
கனவோ, கற்பனையோ சிம்ரனை அந்தப் பாட்டுக்கு ஆட வைத்திருக்கலாமே என தங்களுடைய ஏமாற்றத்தை தெரிவித்து வருகிறார்கள்.