தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஒருவர், அதன் பிறகு வெறும் 15 வயதில் 43 வயது உடைய நடிகருக்கு ஜோடி போட்ட சம்பவம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
ஏனென்றால் 90-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவர் கண்ணழகை பார்த்து இளசுகள் கிறங்கி தவித்தனர்.
நடிகை மீனா சூப்பர் ஸ்டார் உடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்தார். அதன் பின் தெலுங்கில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி, பிறகு தமிழில் ராஜ்கிரணுடன் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கதாநாயகியாக ஆக என்ட்ரி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்தார். இந்த படத்தில் நடிக்கும் போது மீனாவிற்கு வயது 15 தான் என கேள்விப்பட்டதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பத்தே வருடத்தில் அவருக்கு ஜோடியாக வந்ததால் திரை உலகமே ஷாக்கானது.
இருப்பினும் எஜமான் படத்தில் வைதீஸ்வரி என்ற கேரக்டரில் மீனா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கட்டி போட்டார். என்னதான் ரஜினியை விட மீனா 28 வயது குறைந்தவர் என்றாலும் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது.
இந்த வயது வித்தியாசம் திரையில் கொஞ்சம் கூட தெரியாமல் நல்ல முதிர்ச்சியாக நடித்திருப்பார் மீனா. இதனாலையே இவருக்கு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, அஜித், பார்த்திபன், சத்யராஜ், முரளி, பிரபுதேவா, கார்த்திக் என தமிழ் சினிமாவின் டாக் நடிகர்களுடன் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது.