காதலரை பிரேக்கப் செய்தாரா தமன்னா?. ரகசிய பதிவால் குழம்பி போன ரசிகர்கள்!

Tamannah: நடிகை தமன்னா, விஜய் வர்மா ஜோடி சமீபத்தில் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. தமன்னா பாலிவுட்டில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படத்தில் விஜய் வர்மாவுடன் ரொம்பவே நெருங்கி நடித்திருந்தார்.

இது குறித்து மீடியாவில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் வர்மா என்னுடைய வருங்கால கணவர், அதனால் தான் நான் அவருடன் நெருக்கமாக நடித்தேன் என பதில் சொல்லி இருந்தார்.

காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகும் இந்த ஜோடி இதுவரை திருமணத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இருவரிடமுமே திருமணத்தைப் பற்றி கேட்கும் பொழுது மழுப்பலாகவே பதில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள்.

பிரேக்கப் செய்தாரா தமன்னா?

இந்த நிலையில்தான் இவர்களுக்கு பிரேக்கப் ஆகிவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதற்கு காரணம் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிதான்.

ஸ்டோரி பதிவிட்டு 24 மணி நேரத்திற்குள் அந்தப் பதிவை நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா வைத்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிரே இருப்பவர்களுக்கு உங்களுடைய ரகசியத்தை தூண்டி விடாதீர்கள். ஒருவர் உங்களை அழகானவராக பார்க்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை அழகாக பாருங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

Leave a Comment