ரஜினி வர நினைத்த போது இருந்த அரசியல் களமே வேறு.. விஜய் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னென்ன?

TVK Vijay: தன்னுடைய படங்களின் மூலம் அரசியலுக்கு வரப்போவதை கொஞ்சம் கொஞ்சமாக நம்ப வைத்து விட்டு பின்னாளில் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிக் கொண்டார் ரஜினி.

ஆனால் விஜய் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சட்டென கட்சி ஆரம்பித்து 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போ ரஜினியை விட விஜய் தானே கெத்து என்று இப்போதைய தலைமுறைகளுக்கு தோன்றும். ஆனால் 90களின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் உண்மை நிலவரம் தெரியும்.

விஜய் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

94 ஆம் ஆண்டு முதல் ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு பற்றி கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர்தான் முதலமைச்சர் என்ற நிலைமை தான்.

அவர் ஆதரவு கொடுத்த கட்சி சட்டமன்ற தேர்தலில் ஜெயித்தது தான் இதற்கு சாட்சி. படையப்பா படத்தில் கடைசி சீனில் படையப்பாவுக்கு ஆதரவாக வண்டிகளில் கூட்டம் வருவது போல் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும்.

உண்மையிலேயே ரஜினியின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்த கூட்டம் தான் அது. இதே போன்ற கூட்டம்தான் இப்போது விஜய்க்கும் கூடுகிறது.

ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால் அப்போதைய காலகட்டத்தில் ரஜினி என்பவரை தாண்டி ரசிகர்களின் மனதை வென்ற பெரிய ஆளுமைகள் என்று யாரும் கிடையாது.

ஆனால் இப்போது அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என ரசிகர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். தங்களுடைய ஹீரோ எந்த பக்கம் போகிறாரோ அந்த பக்கம் போவதற்கு கூட ரசிகர்கள் கூட்டம் காத்து இருக்கிறது.

இதுதான் விஜய் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால். இதைத் தாண்டி சமூக வலைத்தளத்தில் நடக்கும் IT wing போட்டி, வருமானவரித்துறை சோதனை என எக்கச்சக்க தடைகளை தாண்டி தான் விஜய் ஜெயிக்க வேண்டும்.

ஆனால் ரஜினி அன்று ஒரு முடிவெடுத்து களத்தில் இறங்கி இருந்தால் தமிழக அரசியலில் முக்கிய நபராக இருந்திருப்பார்.