நடிகைகளில் சிலர் மார்க்கெட் நன்றாக இருக்கும் போதே திடீரென்று காணாமல் போய் விடுவார்கள். எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் போய்விடும். சமூக வலைத்தளங்களில் கூட அவர்களை பற்றி வேறு எந்த தகவலும் வெளிவராது. சிலர் வெளியில் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் கூட செய்து கொள்கிறார்கள்.
அப்படி ஒரு நடிகையை பற்றி தான் இப்போது ஒரு தகவல் வைரலாகி கொண்டிருக்கிறது. இவர் நடிகர்கள் ஆர்யா, சூர்யா, சித்தார்த், ஜீவா போன்ற நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் மிகப்பெரிய விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் இப்போது பிரபல இயக்குனரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் தன்யா பாலகிருஷ்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர். காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி ஹீரோயின் தோழியாக நடித்திருக்கிறார். ராஜா ராணியில் இவருடைய நடிப்பு குறிப்பிடத்தக்கது.
இவர் இப்போது இயக்குனர் பாலாஜி மோகனை திருமணம் செய்து இருக்கிறாராம். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது திரைப்படம் மூலம் இயக்குனரானர். இவர் வாயை மூடி பேசவும், மாரி, மாரி2 போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தான் இப்போது நடிகை தன்யாவை ரகசிய திருமணம் செய்திருப்பதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், நடிகை தன்யாவும், இயக்குனர் பாலாஜி மோகனும் சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் இதுபற்றி அவர்கள் இன்னும் வெளியே தெரிவிக்காமல் இருக்கிறார்கள், நடிகை தன்யா நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன்களுக்கு கூட அவர் கணவர் விடுவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் இப்போது கல்பிகா கணேஷ் பேசிய அந்த வீடியோ இப்போது யூடியூபில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு நடிகை தன்யா தான் காரணம் என்றும், அதோடு தன்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை மிரட்ட பார்ப்பதாகவும் கல்பிகா கணேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார்.