காதல் மன்னனாக வலம் வந்த ஏகே.. சைட் அடித்து மாட்டி கொண்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களே தங்களுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள். இவர்களுடன் நடிக்க நடிகைகளே நான் நீ என்று போட்டி போட்டுக் கொள்வார்கள். அந்த வரிசையில் கமலஹாசன், கார்த்திக்கை அடுத்து தன்னுடைய அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகர் அஜித்குமார். எப்பொழுதும் ஹீரோயின்களை வர்ணிப்பது போலவே பாடல்கள் எழுதப்பட்டு கொண்டிருந்த தமிழ் சினிமாவில் அஜித்தின் அழகை வர்ணித்து காதல் மன்னன் படத்தில் பாடல் எழுதப்பட்டிருக்கும்.

ஆரம்ப காலகட்டத்தில் அஜித்தை காதல் மன்னன் என்றே அழைத்தனர். அதற்கேற்றவாறு தொடர்ந்து அஜித்தும் காதல் திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வந்தார். அமர்க்களம் மற்றும் தீனா போன்ற திரைப்படங்கள் தான் அஜித்தை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. காதல் மன்னனாக இருந்த அஜித் அவ்வப்போது ஹீரோயின்களுடன் காதல் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.

நடிகர் அஜித் தன்னுடன் காதல் கோட்டை மற்றும் தொடரும் படங்களில் நடித்த நடிகை ஹீராவை துரத்தி துரத்தி காதலித்தது அனைவருக்கும் தெரியும். அதேபோன்று அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித். அதே நேரத்தில் அஜித்தை சைட் அடித்த பிரபல நடிகையும் இருக்கிறார்.

2000 ஆண்டு இயக்குனர் ராஜு மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு நடித்த திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படம் ஒரு வித்தியாசமான காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகை தபு அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் போது நடிகை தபு அஜித்தை பயங்கரமாக சைட் அடித்திருக்கிறார். இது மொத்த பட குழுவுக்கும் தெரியுமாம் . தற்போது இந்த படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த விஷயம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அஜித்தை போன்று ஒரு ஹீரோ நடிக்கும் பொழுது எந்த நடிகையாக இருந்தாலும் அவரை சைட் அடிக்கத்தான் செய்வார்கள்.

நடிகை ஹீராவுடனான காதல் மற்றும் ஷாலினி உடனான திருமணம் இதைத் தவிர இன்றுவரை நடிகர் அஜித்குமார் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கியதே இல்லை. அவருடன் பணிபுரிந்த அத்தனை நடிகைகளுமே அவரை ஜென்டில்மேன் என்றுதான் தங்களுடைய பேட்டிகளில் சொல்வார்கள். அந்த அளவுக்கு பெண்களை மதிக்க கூடியவர் அஜித்.