வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் மூலம் பெரும் சருக்களை சந்தித்துள்ளார். ஒரு டாப் ஹீரோவின் படம் திரையிட்ட ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது.
இப்போது பிரின்ஸ் படத்தின் தோல்வியால் மனம் உடைந்து போன சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் மாவீரன் படத்தின் கதையில் சில மாற்றங்களை கொண்டு வரச் சொல்லி இயக்குனரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இதனால் மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால் கோபமடைந்த இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார். ஆனால் சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்ததாக கூறி படக்குழு தப்பித்துக் கொண்டனர். இந்நிலையில் மாவீரன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது.
இதற்குக் காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். கோபத்தினால் உச்சாணி கொம்பிலே நின்ற சிவகார்த்திகேயனை லோகேஷ் சமாதானப்படுத்தி உள்ளார். ஏனென்றால் மாவீரன் இயக்குனர் அஸ்வினும் லோகேஷ் கனகராஜூம் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர்.
இவர்கள் இருவரும் ஒரே ரூமில் தான் தங்கி இருந்தார்களாம். அதனால் சிவகார்த்திகேயனிடம் சென்று அஸ்வின் நல்ல திறமைசாலியான இயக்குனர், அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி படத்தை கொடுப்பார் என உறுதி கொடுத்துள்ளார்.
இதனால் ஒரு அளவு இயக்குனர் மீது நம்பிக்கை வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் மாவீரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ஆகையால் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் மாவீரன் படம் சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கிவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.