பிரகாசமான நடிகரின் கேரியருக்கு 99% ஆப்பு வச்சாச்சு.. சூழ்ச்சியால் வெற்றிமாறன் கூட ட்ராப் செய்த பரிதாபம்

Vetrimaaran: சினிமாவில் ஒரு நடிகர் பேரும் புகழோடும் இருந்து, அவரால் காரியம் ஆக வேண்டும் என்றால் காலில் விழவும் தயங்க மாட்டார்கள். அதே நேரத்தில் அந்த நடிகருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை, இல்லை அவர் நடித்தால் அந்தப் படத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்று தெரிந்து விட்டால், அதுவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்கள், அப்படியே அந்த நபரை ஓரங்கட்டி விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் இது ரொம்பவும் சகஜமாக நடக்கும் ஒரு விஷயம் தான். நடிகர்கள் வடிவேலு, கேப்டன் விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் இது போன்ற சுயநலத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இப்போது இந்த லிஸ்டில் முக்கியமான மாஸ் நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இவரை ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் ஓரங்கட்ட தொடங்கி இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் இந்த மாஸ் நடிகர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லலாம். இவர் வில்லனாக நடித்த கண்டிப்பாக படம் ஹிட்டு தான் என்று ரிலீசுக்கு முன்பே முடிவு கட்டி விடுவார்கள். அந்த அளவுக்கு திறமைசாலியான இவரை, தற்போது வாய்ப்புகள் எதுவும் கொடுக்காமல், தனிமையில் விட்டிருக்கிறது தென்னிந்திய சினிமா.

கில்லி, அந்நியன், வேட்டையாடு விளையாடு, திருவிளையாடல் ஆரம்பம் என ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிக்காட்டியவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். வில்லனாக மட்டுமில்லாமல், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என அத்தனையிலும் நின்று பேசும் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர்.

கர்நாடகா மாநிலத்தின் தேர்தலில் போட்டியிட்ட இவர், வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அதன் பிறகும் இந்திய அரசியலில், தன்னுடைய நடுநிலையான கருத்துக்களை இவர் சொல்லி வந்ததால், இவரை இனி படத்தில் புக் செய்தால், மத்திய அரசால் தங்களுடைய படங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என நினைத்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பிரகாஷ்ராஜை ஒதுக்கி வருகிறார்கள்.

தன்னுடைய படங்களின் மூலம் நிறைய சமூக கருத்துக்களை சொல்லி வரும் வெற்றிமாறன் கூட, இவருடன் ஒரு படம் பண்ணுவதற்கு முடிவு எடுத்துவிட்டு, அதன் பின்னர் இவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் படத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என நினைத்து அவரை படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். தற்போது பிரகாஷ்ராஜ் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார். கிட்டத்தட்ட அவருடைய கேரியர் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிட்டது.