கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மட்டுமின்றி தாறுமாறாக வசூலையும் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படம் திரையரங்கில் மட்டுமல்ல ஓடிடி-யிலும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தப் படத்தில் ஹீரோவை விட இசையமைப்பாளருக்கு மூன்று மடங்கு சம்பளம் அதிகமாம். ஏனென்றால் 6 கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் உடன் கவின் கூட்டணி போடுகிறார்.
கவினின் அடுத்த திரைப்படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்க இருப்பதாகவும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு தற்போது அனிருத் 6 கோடி சம்பளத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் முன்பு தனுஷின் படத்திற்கு நோ சொல்லிவிட்டு இப்போது கவினின் படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார் அனிருத்.
அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷின் 50-வது படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுப்பு தெரிவித்து, தற்போது கவினின் அடுத்த படத்திற்கு ஓகே சொல்லி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. சமீப காலமாகவே தனுஷ் மற்றும் அனிருத் இருவருக்கும் ஒத்துப் போவதில்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த விஷயம் உண்மைதான் என ஊர்ஜித படுத்துவிட்டனர்.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் மற்றும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக மாறி உள்ளார்.
எனவே டாடா படத்திற்கு பிறகு கவினின் மார்க்கெட் தாறுமாறாக எகிறிவிட்டது. அதனால் தான் இவருடைய அடுத்த படத்தின் கூட்டணியில் பெரிய பெரிய பிரபலங்கள் இணைந்துள்ளனர். அதிலும் கவின் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற விட்டுள்ளது.