பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் திரிஷா. இப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஜோடிகள் என்று சில உள்ளது.
அதில் விஜய், திரிஷா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த கூட்டணி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.
இதற்காக தனி விமான மூலம் லியோ படக்குழு காஷ்மீர் சென்றது. அங்கு அதிகமாக குளிர் உள்ள காரணத்தினால் திரிஷா தன்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் எடுக்கும் போது மட்டும் காஷ்மீர் சென்று வருகிறாராம். விஜய் மற்றும் த்ரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இப்போது திரிஷாவுக்கு 39 வயது ஆனாலும் கில்லி படத்தில் பார்த்தது போல் அதே இளமையுடன் உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் படத்தில் கதாநாயகிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது. ஆனால் லியோ படத்தில் திரிஷா நடிப்பதால் கண்டிப்பாக அவருக்கு வெயிட் ஆன கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குந்தவையைத் தொடர்ந்து லியோ படத்தில் அவரது கதாபாத்திரமும் ரசிகர்களால் பெரிய அளவு பேசப்படும். பிளடி ஸ்வீட் விஜய் அருகில் த்ரிஷா உள்ள புகைப்படம் அவரது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. லியோ படத்தை பற்றிய அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.
