விஜய்யை வைத்து விஷாலை டோட்டலா டேமேஜ் செய்த பிரபலம்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.!

சில மாதங்களுக்கு முன் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் விஷாலுக்கு சம்பளப் பிரச்சனை மற்றும் கால்ஷீட் பிரச்சனை என்று சொல்லி அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய் வெளியிட்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற விஜய் விருப்பப்படுவதாக கூட விஷால் சொல்லி இருந்தார். இந்நிலையில் பிரபலம் ஒருவர் மீடியா முன் நடிகர் விஜய் உடன் ஒப்பிட்டு விஷாலை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அவருடைய அந்த பரபரப்பு பேச்சு விஷாலை பயங்கரமாக டேமேஜ் செய்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே சினிமா மற்றும் அரசியலை தனித்தனியாக பார்க்க மாட்டார்கள். இரண்டுமே ஒன்றோடு ஒன்று கலந்தது தான். சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவர்கள் கோலிவுட்டில் ஏராளம். படங்களில் அரசியல்வாதிகளை ஹீரோக்கள் விமர்சிப்பது மற்றும் பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அரசியல்வாதிகள் அதை எதிர்ப்பது என்பது இயல்பான ஒன்றுதான்.

தளபதி விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியானாலும் சில வாரங்களாக அது பற்றி அதிகமான பேச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. விஜய்யும் அதற்கு ஏற்றவாறு தன்னுடைய மக்கள் இயக்கத்தை வைத்து ஒரு சில செயல்களை செய்து வருகிறார். இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டு இருக்கின்றனர்.

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜு நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்குள் வரலாம். ஏனென்றால் அவர் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஒன்று, இரண்டு படங்களில் நடித்த நடிகர் விஷாலே தன்னை ஒரு முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் பொழுது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்பது போல் விஷாலை டேமேஜ் செய்து பதில் அளித்திருக்கிறார்.

செல்லூர் ராஜுவின் இந்த நக்கலான பேச்சுக்கு ஏற்ப நடிகர் விஷாலும் சில வருடங்களுக்கு முன் அரசியலில் குதிப்பதாக ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். நெட்டிசன்களால் தமிழக அரசியலில் அதிகமாக கலாய்க்கப்பட்டது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுதான். அவரே விஷாலை டேமேஜ் செய்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.