அப்ப டிவி ரிமோட்டை போட்டு உடைப்பதெல்லாம் பொய்யா.. கமலை விளாசும் ப்ளூ சட்டை

Blue Sattai Maran : கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய போது அவரது ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்திருந்தனர். படித்த இளைஞர்கள் தான் அரசியலில் செயல்பட வேண்டும் என பல விஷயங்களை கமல் முன் நிறுத்தினார். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு விளம்பரமும் தயார் செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதை மாற்ற மாற்று சக்தி வேண்டும் என்று கூறி டிவி ரிமோட்டை உடைக்கும் படி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து அரசியலிலும் செயல்பட்டு வந்த கமல் இப்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கமல் அரசியல் கட்சியுடன் கூட்டணி போட இருக்கிறார். இந்நிலையில் அவரின் விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. அதோடு கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் உதயநிதி நடிப்பதாகவும் கூறப்பட்டது.

உதயநிதி அமைச்சர் பதவியை ஏற்றவுடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். ஆனாலும் உதயநிதி மற்றும் கமல் இடையே நல்ல நட்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி போட இருப்பதாகவும் விரைவில் தகவல் வெளியாகும் என்று ஒரு செய்தி வந்துள்ளது.

அதுவும் கோவை தொகுதி கமலுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் கமல் டிவி ரிமோட்டை உடைத்து புரட்சி செய்தார். இப்போது அதெல்லாம் பொய்யா என்று ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சும்மாவே சாமி ஆடும் ப்ளூ சட்டைக்கு சாம்பிராணி கிடைத்தால் சொல்லவா வேண்டும்.