TVK Vijay: பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை செய்து இந்தியாவில் தற்போதைய சூழ்நிலையில் அதிக செல்வாக்கு பெற்ற 4 கட்சிகளின் பெயரை வெளியிட்டு இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் ஆதரவு, மக்களை சந்திப்பது, கட்சி வேலைகள், ஆதரவாளர்களின் எண்ணிக்கை, கடந்த 1 வருடத்தில் அடைந்திருக்கும் உச்சம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
தட்டி தூக்கிய தவெக
தமிழக வெற்றி கழகம்: இதில் முதல் இடத்தில் நடிகர் விஜய் தொடங்கிருக்கும் தமிழக வெற்றி கழகம் இடம் பெற்று இருக்கிறது.
பல தலைமுறைகள் கடந்திருக்கும் இந்தியாவின் பெரிய கட்சிகளை ஒரே வருடத்தில் பின்னுக்கு தள்ளியிருப்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரைக்கும் ராகுல் காந்திக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய அளவில் அதிக செல்வாக்கு இருக்கும் காட்சிகளில் காங்கிரஸ் இரண்டடைவது இடத்தில் இருக்கிறது.
பிஜேபி: பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்த கட்சியின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் தான் இருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
ஜனசேனா கட்சி: நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி இந்த ஆய்வறிக்கையில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
