அஜித் குமாருக்கே ரோல் மாடலா!. யாருப்பா அந்த அயர்டன் சென்னா, கண் கலங்க வைத்த மரணம்!

Ajith Kumar: வாழ்ந்தால் நடிகர் அஜித் குமாரை போல வாழ வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த அஜித்குமாருக்கே ரோல் மாடலாக ஒருத்தர் இருப்பது ஆச்சரியம் தான்.

நேற்று நடிகர் அஜித்குமார் அயர்டன் சென்னா என்பவரின் சிலைக்கு மரியாதை செலுத்தியது பெரிய அளவில் வைரலானது. இதனாலேயே அவருடைய ரசிகர்களும், இணையவாசிகளும் யார் அந்த அயர்டன் சென்னா என்று தேட ஆரம்பித்தார்கள். அவர் யார் என இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாருப்பா அந்த அயர்டன் சென்னா

மோட்டார் சாகச உலகத்தில் தனி அடையாளம் பதித்த பிரேசிலியன் ஃபார்முலா-1 ஓட்டப்பந்தய வீரர் தான் அயர்டன் சென்னா த சில்வா, தனது திறமையால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர்.

அயர்டன் சென்னா, 1960ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி பிரேசிலின் சாவோ பாவுலோவில் பிறந்தார். சிறுவயதிலேயே கார்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய சென்னா, கார்டிங் மூலமாகவே தனது ரேசிங் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் சிறிய வயதிலேயே ரேசிங் துறையில் வந்தவர்.

அயர்டன் சென்னா, 1984ஆம் ஆண்டு ஃபார்முலா-1 பந்தயத்தில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். பல்வேறு அணிகளுக்காக பந்தயத்தில் பங்கேற்ற அவர், McLaren அணியுடன் கூட்டிணைந்து 1988, 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்றார்.

சென்னாவின் பந்தய நுட்பம், நேர்த்தி மற்றும் எதிரியை மதிக்கும் மனப்பான்மை, அவரை ரசிகர்களிடையே தெய்வீக அந்தஸ்திற்கு உயர்த்தியது. அவர் பங்கேற்ற போலே பாசோ, மொனாகோ, சில்வர்ஸ்டோன் போன்ற சிக்கலான போட்டிகளில் சாதித்த வெற்றிகள் வரலாற்றில் நினைவாக நிறைந்துள்ளன.

1994ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளான அன்று மே 1ஆம் தேதி, இத்தாலியின் இமோலா பந்தய திடலில் நடைபெற்ற San Marino Grand Prix போட்டியின் போது, சென்னா ஒரு மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னாவின் மரணம் கார் ரேஸ் போட்டிகளில் பல பாதுகாப்பு மாற்றங்களை ஏற்படுத்தியது. பிரேசிலில் தேசிய துக்கமாக அறிவிக்கப்பட்டது.

அவரின் நினைவாக Instituto Ayrton Senna என்ற தொண்டு நிறுவனம் அமைக்கப்பட்டு, ஏழை குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வளர்ச்சி பணிகளை இன்று வரை முன்னெடுத்து வருகிறது.

]