Actor Ajith’s Vidaamuyarchi shooting cancelled: 2023 தொடக்கத்தில் துணிவுடன் வந்த அஜித் துணிவை வெற்றி பெற வைத்த கையோடு அடுத்த ப்ராஜெக்ட்க்கு ஆயத்தமானார். இதனை உறுதிப்படுத்தும் பொருட்டு ஏகே 62 க்காக மகிழ்திருமேனியின் இயக்கத்தில் ஒப்பந்தமானார்.
மே 1, அஜித்தின் பிறந்தநாள் அன்று படத்தின் டைட்டில் விடா முயற்சி என்று பெயர் வைத்து படப்பிடிப்பை பாலைவனப் பிரதேசமான அஜர்பைஜானில் பிக்ஸ் செய்தனர். இதனால் பட குழுவினர் சென்னைக்கும் அஜர்பைஜானுக்கும் பறக்கலானார்கள். இதற்காக அஜித் தொடர்ந்து 70 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். மங்காத்தாவை போல் விடா முயற்சிக்காக அஜித், த்ரிஷா, அர்ஜுன் என மூவரும் மீண்டும் இணைந்துள்ளனர்
படப்பிடிப்பு முதலில் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும் விரைவாக முடிக்கும் எண்ணத்தில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக்கப்பட்டது. வாரத்தின் ஏழு நாளும் ஷூட்டிங் தொடர்ந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் வார விடுமுறை கேட்கவே அதற்கும் பச்சைக்கொடி காட்டினார் அஜித்.
இப்படத்தில் நடிக்கும் போதே அஜித் அவர்கள், ஆதிக், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் என பல இயக்குனர்களுடன் கதை கேட்டு அடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வந்தார். மொத்தமாக இன்னும் 40 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விடும் நோக்கில் இரவு பகலாக உழைக்கத் தொடங்கினர் விடாமுயற்சி படக்குழுவினர். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை மொத்தமும் கேன்சல் ஆகிவிட்டது.
ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மணல் புழுதி சுழட்டி அடித்ததால் சுருண்டு போயினர் படக் குழுவினர். லென்ஸ் அனைத்தையும் மூடிவிட்டதால் அதிகமான சேதம் தடுக்கப்பட்டது.
அஜித் அவர்கள் ஜெட் வேகத்தில் திட்டங்கள் போட குளிர், பனி, சூறாவளி என இயற்கை மொத்தமாக தன் படையெடுப்பை தொடங்க விடாமுயற்சியின் சூட்டிங் தடால் என கேன்சல் ஆனது. தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதால் பட குழுவினர் மொத்தமாக பேக்கப் செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளனர்.
விறுவிறுப்பான விடாமுயற்சி, என்ன செய்வதென்று விடை தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்.