பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை..! மணிரத்தினத்திடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜெயம் ரவி

Actor Jayam ravi committed Maniratnam Thug life: நல்லவனுக்கு நல்லது செய்வதில் ஆசை இருக்கும். கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும். ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெயிப்பது பேராசை தான். என பலமான எதிரியை நாயகனுக்கு செட் பண்ணி தனி ஒருவனை ஜெயிக்க வைத்த மோகன் ராஜாவின் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கு இடையில் ராஜராஜனின் வரலாற்றை கருவாகக் கொண்ட பொன்னியின் செல்வனில் அருண் மொழிவர்மனாக தோன்றி அனைவரின் பாராட்டுகளையும் வென்றிருந்தார் ஜெயம் ரவி. இவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்.

“மற்ற இயக்குனர்களின் படங்களில் வசனங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும், மணிரத்தினத்தின் படங்களில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்” என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வனில் நடித்த சிலரை அப்படியே மணிரத்தினம் தனது அடுத்த படமான தக்லைப்பிலும் இணைத்தார்.

மணிரத்தினம் கமலஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள படம் தக்லைப். 38  வருடங்கள் கழித்து நாயகனுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். ஆக்சன் திரில்லர் மூவியான தக்லைப்பில் கமலுடன் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 நடந்து கொண்டிருந்ததால் கெட்டப்பை மாற்றக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கமல், சீசன் முடிந்த நிலையில் தக்லைப்பில் முழு நேரஈடுபாட்டுடன் படப்பிடிப்பில் இறங்க உள்ளார். கமலுக்காகவே மொத்த பட குழுவும் மற்ற படங்களில் கமிட் ஆகாமல் வெயிட் பண்ணி கொண்டு உள்ளனர். ஜெயம் ரவியும் பெரிய இயக்குனர், பெரிய நடிகர், பாக்கியமாக நினைத்து ஒன்றும் பேச முடியாமல் தவித்து வருகிறாராம்.

மோகன் ராஜா இயக்கத்தில் 2015 வெளிவந்த தனி ஒருவன் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயம் ரவி  மணிரத்தினத்தின் தக்லைப்பில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளதால் தனி ஒருவன் 2  கால்ஷீட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம். தக்லைப்பை முடித்துவிட்டு டிசம்பரில் தனி ஒருவன் 2 துவங்கப்பட போவதாக தகவல். மேலும் முக்கிய செய்தியாக தனி ஒருவன்2 வில்லன் கேரக்டரில் அமீர்கான் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.