Actor Kamal daughter shruthi hassan’s living together life: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்கிற நோக்கில் தனக்கு சரியென பட்டதை செய்து, கேள்வி கேட்கும் பலருக்கு சாட்டையடி கொடுத்து சுதந்திர பறவையாய் வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசனிடம் காதலும் கடந்து போகும் என்கிற மாதிரி என்பது போல் இவரின் ஆதரவாளர்கள் பலர் தங்கள் அன்பைப் பொழிந்து சென்று விட்டுள்ளனர்.
மைக்கேல் கார்சேல்: இங்கிலாந்து கலைஞர் ஆன இவருடன் திருமணம் வரை சென்றதாக கிசுகிசுக்கப்படுகிறது. தன் தந்தையிடம் இவரைத்தான் கல்யாணம் பண்ண போகிறேன் என்று தைரியமாக கூறி அதிர்ச்சியடைய வைத்தாராம் இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக காதல் கிளிகள் சேராமல் போயினர்.
தனுஷ்: 3 படத்தில் நடித்த போது தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் காட்சிகள் மிகவும் நெருக்கமாக அமைந்தன இதனாலேயே தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் பெயர்கள் அடிக்கடி கிசு கிசுக்கப்பட்டன. தனுஷிற்கு நெருக்கமானவர்கள் மூலமாக சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டது.
சித்தார்த்: தெலுங்கில் சித்தாத்துடன் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டதாகவும் இருவரும் ஹைதராபாத்தில் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் அவுட்டிங் சென்றதற்காக ஏற்பட்ட வாக்குவாதமே இவர்கள் காதல் முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறதாம். இவன் நமக்கு செட்டாக மாட்டான் என்று பிரிந்து விட்டாராம்.
தெலுங்கு திரையுலகில் பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் நாக சைதான்யா, சுரேஷ் ரெய்னா என பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள சாந்தனு ஹசாரிகா என்கிற இசை கலைஞருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.
இது எல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியும் ஆனால் கேட்க மாட்டார், கேட்க முடியாது அதனால் சைலன்டாக வேடிக்கை பார்த்து வருகிறார். ஸ்ருதிஹாசன் யாரையும் மேரேஜ் பண்ணிக்க மாட்டார் அதனால் இவருடன் டேட்டிங்க்ல இருக்க ரசிகர்கள் ஆசைப்பட்டு வலைத்தளத்தில் கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுகிறார்களாம். ரசிகர்களின் கேள்விக்கு இவர் பதில் என்னவோ நோ.. “நோ மீன்ஸ் நோ”.
முற்போக்குவாதியாக விளங்கும் ஸ்ருதிஹாசன் தனக்கு செட் ஆனால் மட்டுமே வாழ்வது என கொள்கை பிடிப்போடு இருக்கிறார். இது சரிவராது என்ற மைண்ட் செட்க்கு வந்துவிட்டால் கண்டுக்காமல் கழட்டி விட்டு போய்விடும் வழக்கத்தை கொண்டுள்ளாராம்.