Rajini Movie Actress: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்த அந்த நடிகை ரஜினி முதல் கமல் வரை ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானார். அதன் பின்பு இவர் இளம் நடிகையாக டாப் நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்னாளில் இவர் டாப் காமெடி நடிகர்களுடன் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
அப்படிப்பட்ட நடிகை 17 வயதில் எப்படியோ முரட்டு வில்லன் வலையில் சிக்கி கொண்டார். கேளடி கண்மணி, பிரதாப் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சு. இவர் தமிழை விட தெலுங்கு சினிமாவில் ரொம்ப ஃபேமஸ், அங்கே வில்லன் நடிகர் டைகர் பிரபாகரன் வலையில் எப்படியோ விழுந்து விட்டார்.
அவருக்கு மூன்று கல்யாணம் ஆனது என்று இவருக்கு தெரியாமல், அவருக்கு நான்காவது மனைவியாக கழுத்தை நீட்டி உள்ளார். வீட்டிற்கு போனதும் தான் டைகர் பிரபாகரனுக்கு இவரை விட மூத்த வயதில் பையன் இருக்கிறான் என்று அவருக்கு தெரிந்துள்ளது. அவரை நம்பி போனதற்கு வாழ்க்கையே சீரழித்து விட்டார் என்று இப்பொழுது குழம்பி வருகிறார்.
டைகர் பிரபாகரன் இப்போது இறந்துவிட்டார். இவர் முத்து படத்தில் போலீஸ்காரராக வந்து ரஜினியிடம் அடிவாங்கி செல்வார். இவர் முத்து படத்தில் மீனாவை ஜமீன் வீட்டில் இருந்து முடியை பிடித்து தர தரவென இழுத்துச் செல்லும் காட்சி இன்னமும் கண்ணில் நிற்கும்.
இந்த அளவிற்கு கொடூரமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முரட்டு வில்லலான டைகர் பிரபாகரன் நடிகை அஞ்சுவை ஆசை ஆசையாய் பேசி கவுத்து விட்டார். இவருக்கு அஞ்சுவின் அப்பாவை விட வயது அதிகமானவர். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நல்ல எதிர்காலம் அமையும் என அஞ்சு அவருடைய ஆசை வார்த்தையால் மோசம் போனார்.
அதிலும் கொடுமை என்னவென்றால் வீட்டிற்கு சென்று பார்த்தால் டைகர் பிரபாகரனுக்கு அஞ்சு வயதில் ஒரு பையன் இருந்தது தான் செம ஷாக் ஆனது. அப்படிப்பட்ட வாழ்க்கையை தவறாக தேர்வு செய்து தன்னுடைய சினிமா கேரியரும் நாசமாய் போய்விட்டதாக சமீபத்திய பேட்டிகள் அஞ்சு மிகுந்த வருத்தத்துடன் பேசி உள்ளார்.