ஒரே படத்தால் எகிறிய சூர்யாவின் மார்க்கெட்.. சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இது தவிர இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு பலரும் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் மூலம் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் தற்போது அதன் ரீமேக் உரிமையை இரட்டிப்பு லாபத்துக்காக பேசி வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் ரீமேக் உரிமை பல கோடிக்கு லாபம் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் திரைப்படம் தான். சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சர்ச்சையையும், பிரச்சனையும் பார்த்த திரைப்படமும் இதுதான்.

ஆனால் எந்த அளவுக்கு படம் சிக்கல்களை சந்தித்ததோ அதே அளவுக்கு பல நல்ல விமர்சனங்கள் மற்றும் பாராட்டை பெற்றது. இந்தப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால் சூர்யாவின் மார்க்கெட் தற்போது எங்கேயோ சென்றுவிட்டது. அதனால்தான் தற்போது சூர்யாவுக்கு கோலிவுட் தவிர பாலிவுட்டிலும் செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.