இனி காமெடியே பண்ணாதீங்க வடிவேலு.. தியேட்டரில் வெறுத்து புலம்பும் ஆடியன்ஸுகள்!

Vadivelu: வாழ்ந்து கெட்ட ஜமீன் என்பது போல், வடிவேலு இப்போது சிரிப்பே வராத காமெடியை செய்யும் காமெடியன் ஆகிவிட்டார்.

இவர் சினிமாவில் இல்லாத கடைசி 10 வருடங்களில் கூட ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

ஆனால் மீண்டும் என்ட்ரி கொடுத்து இவ்வளவு வருடங்களாக சேர்த்து வைத்த பெயர் மொத்தத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

வெறுத்து புலம்பும் ஆடியன்ஸுகள்!

இதற்கு நேற்று வெளியான கேங்கர்ஸ் படம் தான் சாட்சி. சுந்தர் சி இயக்கி நடித்து இருக்கும் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதில் என்ன சோகம் என்றால் வடிவேலு வரும் ஒரு காட்சியில் கூட சிரிப்பு வரவில்லை என்பதுதான். வடிவேலுவின் காமெடி படத்தில் தேவையில்லாமல் திணித்தது போல் இருக்கிறது.

அடி வாங்குவது, பாடி லாங்குவேஜ் என எதெல்லாம் வடிவேலுவின் பாசிட்டிவாக இருந்தது அதெல்லாம் இந்த படத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கிறது.

மொத்தத்தில் காமெடி உலகத்தில் இருந்து வாண்டட் ரிட்டயர்மென்ட் வாங்கிக்கொண்டு மாமன்னன் போல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தால் இனி வடிவேலுவின் தலை தப்பும் என்று கூட சொல்லலாம்.