Vijay: மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று சொல்வார்கள். ஆனால் விஜய்க்கு தற்போதைய நிலைமையில் மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமில்லை என்றாகிவிட்டது.
விஜய் எப்போ எந்த விஷயத்தில் மாட்டுவார் தொக்காக தூக்கலாம் என காத்து கிடக்கிறார்கள். அப்படி காத்திருப்பவர்களுக்கு லட்டாக அமைந்திருக்கும் விஷயம் ஜனநாயகன் படம்.
விஜய்யின் சமஸ்தானத்தையே ஆட்டம் காண வைக்க போகும் வாரிசு
விஜயின் கடைசி படம் என்பதால் அந்தப் படத்தை கட்டம் கட்டுவது என்பது வழக்கமாக நடக்க போகும் விஷயம் தான்.
ஆனால் இதிலிருந்து விஜய் தப்பிபாரா என்பதுதான் பெரிய சந்தேகம். எச் வினோத்துடன் விஜய் இணைந்து இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
விஜயின் மாஸ் வைத்து படத்தின் ஓபனிங் பெரிய அளவில் வெற்றி பெற்று விடும். ஆனால் கதை களத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸ்கள் வரவேற்பு கிடைக்காது.
விஜய்க்கு கடைசியாக ரிலீஸ் ஆன லியோ மற்றும் கோட் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் கதை ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இந்த படங்களை எல்லாம் விஜய் சோலோவாக ரிலீஸ் செய்ததால் அவருடைய தலை தப்பியது. ஆனால் ஜனநாயகன் படத்தை அப்படி தனியாக ரிலீஸ் செய்ய ரெட் ஜெயன்ட் நிறுவனம் விடாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கதைக்களத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் விஜய்யின் கடைசி படத்திற்கு பெரிய ஆப்பாக அமைந்துவிடும்.