அரசியலுக்காக பல வருடமாக போடப்பட்ட திட்டம்.. கைவசம் இத்தனை தொழில்களை வைத்திருக்கும் தளபதி

Thalapathy Vijay: தளபதி விஜய் சமீப காலமாக அரசியலில் களம் இறங்க, தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகளை ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டிருக்கிறார். மாணவர்களின் கல்வியின் மூலம் இந்த திட்டத்தை ஆரம்பித்திருக்கும் விஜய் மீதுதான் ஒட்டுமொத்த அரசியல் பார்வையும் தற்போது இருக்கிறது. அவருடைய அடுத்த ரிலீஸ் ஆன லியோவை விட பரபரப்பாக பேசப்படுவது அவர் எடுத்து வைத்து வைக்கும் அரசியல் நகர்வுகள் தான்.

விஜய் திடீரென ஏன் இந்த அரசியல் முடிவை எடுத்தார், இந்த காரணத்திற்காக தான் அவர் அரசியலுக்கு வருகிறார், இந்த நபரை எதிர்க்கத்தான் அரசியலுக்கு வருகிறார் என பல பிரபலங்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை பேட்டிகளில் சொல்லி வருகின்றனர். ஆனால் விஜய்யின் அரசியல் முடிவு என்பது இப்போது எடுக்கப்பட்டதில்லை. பல வருடங்களாக இதற்காக திட்டம் தீட்டி இருக்கிறார் விஜய்.

விஜய் அரசியலில் முழுதாக இறங்கியதற்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியானது. 150 கோடி வரை சம்பளம் ஏறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எப்படி சினிமாவை விட்டுப் போவார், சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டால் அவருக்கு வருமானம் எங்கிருந்து வரும் என்று பல கேள்விகளும் எழுந்து வரும் நிலையில், விஜய் ரகசியமாக செய்து வரும் தொழில்களை பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறார். ஆரம்ப காலங்களில் இவர் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டதால், அதை கருத்தில் கொண்டு தற்போது பல அப்பார்ட்மெண்டுகளை கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபங்களும் இருக்கின்றன.

மேலும் விஜய் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் திருமண மண்டபங்களையும் கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோன்று சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவிலேயே படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார் தளபதி விஜய். இந்த தொழில்களின் மூலம் அவருக்கு தேவையான பணம் எல்லாமே கைக்கு வந்து விடுகிறது.

எனவே விஜய் ஒருவேளை அரசியலுக்கு வந்தாலும், அரசியலுக்கு வந்த பின் சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் அவருக்கு பொருளாதார ரீதியாக சமாளிக்கும் அளவிற்கு கைவசம் இத்தனை தொழில்கள் இருக்கின்றன. இது எல்லாமே தன்னுடைய அரசியல் பிரவேசத்தை மனதில் கொண்டு நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்டிருக்கிறது.