Veera Dheera Sooran: சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் விக்ரமிடம் கடந்த சில வருடங்களாகவே சினிமா பாராமுகமாய் தான் இருக்கிறது.
தொடர்ந்து ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்த விக்ரமுக்கு தூரத்து வெளிச்சமாய் கிடைத்த படம் தான் வீர தீர சூரன். இந்த படத்திற்கு ஏற்கனவே தயாரிப்பு தரப்பில் என்னவெல்லாம் சூனியம் வைக்க முடியுமோ அதை செய்து விட்டார்கள்.
விக்ரமை வச்சு செய்யும் தமிழ் சினிமா
இப்படி ஒரு கதைகளும் கொண்ட படத்தை தொடர் விடுமுறை சமயத்தில் ரிலீஸ் செய்திருந்தால் வசூல் வேட்டையாடி இருக்கும்.
இப்போதைய சூழ்நிலையோ இந்த படம் ரிலீஸ் ஆச்சா என்று கேட்கும் அளவுக்கு அமைந்துவிட்டது. போதாத குறைக்கு ரிலீசுக்கு முந்தைய நாளில் நடந்த சட்ட பஞ்சாயத்து, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்துக் கிடந்தது படத்தில் மற்றும் ஒரு மைனஸ்.
இதெல்லாம் போதாது என்று படம் ரிலீஸ் ஆன உடனேயே மற்றும் ஒரு சம்பவமும் நடந்தேறி இருக்கிறது. ரிலீஸ் ஆகி கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்குள் எச்டி பிரிண்டில் படம் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
வீர தீர சூரன் படத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட கட்டப்பஞ்சாயத்தை சரி செய்யவே தயாரிப்பாளருக்கு விக்ரம் தான் பணம் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை இப்படி துயரம் சுற்றிய அடிப்பது சினிமா மீதான நம்பிக்கையையே குறைக்கிறது.